Sunday, August 11, 2024

துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க (Get rid of evil spirits and demons)

துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:


பேய் மிரட்டி இலைகளை எடுத்து திரிபோல் திரித்து,5 மண் அகல் விளக்கில் ஐவகை எண்ணெய் ஊற்றி,அதில் இந்த இலை திரியை இட்டு செவ்வாய்கிழமைகளில் விளக்கேற்றி வர அவ்விடத்தில் உள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலகி ஒடிவிடும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


...,..................................


Get rid of evil spirits and demons:


Take the ghostly leaves and twist them into a wick, pour five types of oil into a 5-foot earthen lamp, put this leaf wick in it and light the lamp on Tuesdays, and the demons and evil spirits in that place will go away.


For communication 

Shri Kali Devi-Phone:+917598758989




Friday, August 9, 2024

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி

 

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் 108 போற்றியை செவ்வாய் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.

ஓம் அழகா போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் அரன் மகனே போற்றி

ஓம் அயன்மால் மருகா போற்றி

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

ஓம் பன்னிருகை வேலவா போற்றி

ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடர் களைவோனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஓம்கார சொருபனே போற்றி

ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி


ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி


ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் மூலப்பொருளே முருகா போற்றி

ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

ஓம் அறுபடை விடுடையவா போற்றி

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி

ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் மகா சேனனே போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி

ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி

ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி

ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி

ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி

ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி

ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி


ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி

ஓம் கலியுக வரதா கந்தா போற்றி

ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி

ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி

ஓம் சரவணபவ சண்முகா போற்றி

ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி

ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி

ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி

ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி

ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி

ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி

ஓம் யோக சித்தியே அழகே போற்றி

ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி

ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி

ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி

ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி

ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி

ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி

ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி

ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி

ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி

ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி

ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி

ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி

ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி

ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி

ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி

ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

ஓம் அருமையின் எளிய அழகே போற்றி

ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி

ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி

ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி

ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி

ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, August 2, 2024

அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்:



 

அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்:


கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.

கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.

அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.

ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.

ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.

பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.


ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:

ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர

பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,

தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய

நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,

ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,

க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.


முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்

குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள

கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்

தினமும் பதினெட்டு முறை கூறவும்.

ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.

அருள் வாக்கு மற்றும் குறி சொல்ல ஸ்ரீ கருப்புசாமி வசிய யந்திரத் தகடு,தாயத்து,வசிய மை,ரட்சைக் கயிறு மற்றும் தீட்ஷை வேண்டுவோர் அணுகவும்.


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989