Friday, May 9, 2025

ஞாயிற்றுக்கிழமை கூறி வழிபட வேண்டிய சூரியபகவான் மந்திரம்:

ஞாயிற்றுக்கிழமை கூறி வழிபட வேண்டிய சூரியபகவான் மந்திரம்:


உதயம் ஆகும் நேரத்தில் சூரியனை பார்த்தவாறு இந்த மந்திரத்தை செபிக்கவும்.


சூரியன் மூல மந்திரம்:


"ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய

ஆதித்யாய ஸ்வாஹா"


நிவேதனம்-நாட்டு சர்க்கரை,கோதுமையினால் செய்த உணவு.

மலர்:செந்தாமரை

-உரு-108 முறை

பிறகு நீர் வார்த்து விடவும்.ஊதுவத்தி காட்டி நிறைவு செய்யவும். 

தினமும் இந்த மந்திரத்தை செபித்து வரலாம். 

வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Visit as: mantrakali.blogspot.com

 

Tuesday, May 6, 2025

மூன்றாவது கண் திறக்க மந்திரம்


 மூன்றாவது கண் திறக்க மந்திரம் :


பலன் : 

பிறர் மனதையும் ,எதிர் காலத்தையும் அறியவும், இறைநிலையை உணரவும் முடியும்  


மந்திரம்  :  "ஓம் அம் ஓம் லம்"


செய்முறை : 

48  நாட்கள் 108  முறை செய்தால் மூன்றாவது கண்                                               நிச்சயமாக திறக்கும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Visit as: mantrakali.blogspot.com

Monday, April 28, 2025

நாக பாம்பு தீண்டாதிருக்க:

 


நாக பாம்பு தீண்டாதிருக்க:


அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் 

நாக பாம்பு தீண்டாதிருக்க ஒரு மந்திரத்தை அருளியுள்ளார்.


ஊணிப்பா ரரவமது வாய்தான்கட்ட

உண்மையுள்ள மந்திரமது ஒன்றுகேளு

பேணிப்பார் நங்கிலி சீ ஓம் என்றாக்கால்

பெரிதான நாகமது வாய்தான்கட்டும்

பூணிப்பார் தன்னகமே சாட்சியாகப்

புத்தியுட நாயிரத்தெட் டுறுவேசெய்தால்

ஆணிமாத் தந்தமதி னொளிபோல்மைந்தா

ஆதிதொடுத் தந்தமதின் சித்தியாமே.

- அகத்தியர்


ஒருவரை நாக பாம்பு தீண்ட வந்தால் "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை 

உச்சரிக்க பாம்பால் தீண்ட முடியாது என்று வாய் கட்டிப் போய்விடும் என்கிறார். 

இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க 

வேண்டியது அவசியம். "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு 

தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகும். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர்.


தொடர்புக்கு:

ஸ்ரீ காளி தேவி

போன்:+917598758989

மின்னஞ்சல்: mmsvguna@gmail.com

பார்வையிடவும்: mantrakali.blogspot.com,

Thursday, March 27, 2025

தசதீட்சைகள் தொடர்ச்சி:(2, 3 , 4, 5, 6ம் தீட்சைகள்): உம் - இரண்டாம் தீட்சை


 தசதீட்சைகள்  தொடர்ச்சி:(2, 3 , 4, 5, 6ம் தீட்சைகள்):


உம் - இரண்டாம் தீட்சை


தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு


ஆனது உம்மென் றள்புட னீயும்


வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்


கோனவ னருள்தான் குடியிருப்பாமே.


இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.


சிம் - மூன்றாம் தீட்சை


குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு


முடியினில் சென்று முழுமனதாக


அடியினில் சிம்மென் றன்புட னீயும்


வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.


இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.


நம்- நான்காம் தீட்சை


முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு


அத்த னருளை யன்புட நோக்கி


உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்


சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.


மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.


தம்- ஐந்தாம் தீட்சை


தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு


ஆனது தம்மென் நன்புட னீயும்


வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்


ஊனுடன் தேகம் உறுதியு மாமே.


நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர்,ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.


லங்- ஆறாம் தீட்சை


உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு


நெறி தவறாமல் நேர்மையில் நின்று


சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்


பருதி போல் தேகம் பக்குவமாமே.


ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.


......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

Call(or) whatsapp no:

+91 7598758989

Visit as: mantrakali.blogspot.com

Wednesday, March 26, 2025

தசதீட்சைகள்-ஒர் அறிமுகம்

 

”தசதீட்சை” - ஓர் அறிமுகம்:

  

ஒவ்வொரு கட்டத்தையும் துவக்குதல் அல்லது புதிய கட்டத்திற்குள் பயணித்தல் போன்றவை குருவானவரின் மேற்பார்வையில் நடைபெறுதல் அவசியம் என்கின்றனர் சித்தர்கள். இதனையே பொதுவில் தீட்சைகள் என கூறியிருக்கின்றனர்.


அந்த வகையில் இனி வரும் பதிவுகளில் மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர்.இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.


தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..


திரமான தீட்சை செப்புவேன் கேளு

கரமான நெல்லிக்கனி யதுபோல

சரமான வாசி சங்கர கெவுரி

வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.


இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.


இன்றைய பதிவில் முதலாவது தீட்சையைப் பற்றி பார்ப்போம்.


கேளு அம்மென்று கெடியாக மண்டலம்

நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்

சேலுடன் தேகந் திரமது வாகும்

மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.


முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறும்.


......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

Call(or) whatsapp no:

+91 7598758989

Visit as: mantrakali.blogspot.com

Friday, March 21, 2025

பஞ்சாட்சர கணபதி யந்த்ரம் மந்திரம்:

 பஞ்சாட்சர கணபதி யந்த்ரம்  மந்திரம்:

 

எந்த ஒரு கலைகளுக்கும் முழு முதற்கடவுளாக விளங்குகிறவர் கணபதி ஆகையால் எந்த ஒரு சூழ்நிலையிலும் முழு முதற்கடவுளான கணபதி மந்திரத்தை கூறி முறையிட்டால் எந்த ஒரு பிரச்சனைகளும் நம்மை ஒன்றும் செய்யாது .

மூல மந்திரம் 


வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி 

யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி 

நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி 

மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி 

சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி 

அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல 

சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம் 

உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா .


பூஜை முறைகள்   


பஞ்சாட்சர கணபதி பூஜையை வளர்பிறை சமயத்தில் வெள்ளிகிழமை நாட்களில் பூஜை துவங்க வேண்டும் .பூஜையில் இந்த யந்திரத்தை அன்றைய தினம் குறு ஓரை அல்லது சுக்கிர ஓரை சமயம் பார்த்து மேற்கண்ட யந்திரத்தை எழுத வேண்டும் .எழுதி யந்திர சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .அதற்கு பிறகு யந்திரதிற்கு நைவேத்யங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும் ..


இந்த மந்திரத்தை 1008 தடவை விரதமிருந்து கூறிவந்தால் சித்தியாகும் .இதை சித்தி செய்தால் உடனடியாக உங்களை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்; நம் கஷ்டங்களை போக்ககூஒடிய ஒரே மனிதன் நீங்கள்தான் என்று கூறுவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.


அவ்வளவு சக்தி வாய்ந்த யந்திர பிரயாக முறை இது ..

......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

Call(or) whatsapp no:

+91 7598758989

Visit as: mantrakali.blogspot.com


Wednesday, March 19, 2025

அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்


அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்
எந்த விதமான பிரச்சனைகள், கஷ்டங்களையும் போக்கும் எளிய, விரைவில் பலன் தரக்கூடிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
* ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றால் தீய சக்திகளை (கண்திருஷ்டி) விரட்டும் ஆற்றல் உண்டு. 
* வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
* கெட்ட எண்ணங்கள், குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம்.
* வாசலில் கற்றாழை, சப்பாத்தி கல்லி, முள்அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
* வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இவ்வாறு குளிக்கலாம்.
* வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவி, மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவி வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிட வேண்டும்.
* அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
* முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, இவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபாரி ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
* கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அர்ச்சனை செய்தல், தேங்காய் எண்ணெய், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்தால் தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நமது முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.
* வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-பொன்:7598758989


Saturday, March 8, 2025

லிங்காஷ்டக ஸ்லோகங்கள்:


 லிங்காஷ்டக ஸ்லோகங்கள்:


1. ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


4. கனக மஹாமணி பூஷித லிங்கம்

பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


5. குங்குமசந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்

பாவையர் பக்தி பிரேவச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்

ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள

சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே


ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம் மிகவும் சக்தி வாய்ந்த பாடலாக கருதப்படுகிறது. இப்பாடலை தினமும் பாடி வந்தால் இறப்பின் போது சிவலோகத்தில் மோட்சத்தை அடையலாம் என்று கூறுகிறார். இப்பாடல் மகாவிஷ்ணு, நான்முக பிரம்மன் மற்றும் அத்துணை தேவர்களும் அர்ச்சித்து வழிபட்ட லிங்கமாக பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறார் எனவே இதில் இருக்கும் 8 லோகங்களையும் இடைவிடாமல் தினமும் உச்சரித்து வந்தால் நமக்கு இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் விரைவாக தீருமாம். மேலும் தீர பிணி தீரவும், சகல சௌபாக்கியங்களும் பெறவும், பாவங்கள் தீரவும் இப்படி தினமும் உச்சரித்து பயன் பெறலாம்.

......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Friday, March 7, 2025

இந்திர பகவான் காயத்ரி மந்திரம்

 இந்திரபகவான் காயத்ரி மந்திரம்:


"ஓம் தேவராஜாய வித்மஹே

வஜ்ரஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்"


இந்த காயத்ரி மந்திரத்தை தினசரி 108 முறை கூறி வர பணப் புழக்கம் அதிகரிக்கும்.தொழில் மேன்மையுறும்.வீடு வாகன வசதி உண்டாகும்.


பணப்புழக்கம் அதிகரிக்கச் செய்யும் தன ஆகர்ஷண யந்திரத் தகடு கிடைக்கும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-பொன்:+917598758989


Saturday, October 19, 2024

வாராகி அம்மன் மந்திரம்

 


வாராகி அம்மன் மந்திரம்:

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் வாராகியே நமஹ"


 இதில் ஓம் என்பது பிரணவ மந்திரமாக கருதப்படுகிறது. ஸ்ரீம் என்னும் பீஜ மந்திரம் எதிரிகள் தொல்லை நீங்க உதவும். சௌம் என்னும் பீஜ மந்திரம் நினைத்த காரியம் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும். க்லீம் என்னும் பீஜ மந்திரம் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க துணை புரியும். 

 இந்த மந்திரத்தை தினமும் காலையில் வீட்டில் வாராகி அம்மனுக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு பலன் தரும் அளவு கூறுவதன் மூலம் வாராஹி அம்மனின் அருள் கிடைக்கும். மேலும் நமக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போழுதெல்லாம் நமது மனதிற்குள் இந்த மந்திரத்தை கூறி வருவதன் மூலமும் பல பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை ஒரு லட்சத்து எட்டு முறை யார் மனதார வாராஹி அம்மனை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதே எளிமையான சமயம் வாய்ந்த இந்த மந்திரத்தை சக்தி வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து கூறுபவர்களுடைய வாழ்க்கையில் நினைத்தது அனைத்தும் நடந்தேறும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-பொன்:+917598758989

இவ்வாறு பார்வையிடவும்:mantrakali.blogspot.com

Thursday, September 12, 2024

நவகோள் பரிகாரங்கள்

நவகோள் பரிகாரங்கள்

1.சூரியனுக்குரிய பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டி கோதுமை தோசை போன்றவற்றை செய்து தானும் சாப்பிடலாம். வீட்டுக்கு வரும் உறவினர்க்கும் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கோதுமை அல்வா வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்தலாம். இதனால் மேலதிகாரிகள் கோபம் தணியும் .அரசு சம்பந்தமான காரியங்கள் கை கூடும்.

2. சந்திரனுக்குரிய பரிகாரம்

பலா மரத்தின் வடக்கு போகும் வேரை பூச நட்சத்திரத்தில் அல்லது அமாவாசை ஞாயிற்றுக்கிழமை கூடிய சுபதினத்தில் காப்புக் கட்டி எடுத்து வந்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள சந்திர திசை முழுவதும் நலம் தரும்.

3.செவ்வாய் பகவானின் மூலிகையான சிவனார் வேம்பை முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி எடுத்து அணிந்து கொள்ள அதிகார பதவி கிட்டும். உடல் நலம் தேறும்.எதிரிகள் சரணடைவார் .உறவுகள் மேம்படும்.எதிலும் முக்கியத்துவம் கிட்டும்.செவ்வாயின் திசை முழுவதும் பலன் தரும்.சகோதரர்கள் நலம் பெறுவார்.

4.புதனுக்குரிய பரிகாரம்

புதனுக்குரிய இருவேலி மூலிகை அல்லது செந்நாயுருவி வேருக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி உயிர் கொடுத்து பூஜையில் வைத்து புதன்கிழமை புதன் ஓரையில்( காலை 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள்) தாயத்தாககி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். இதனால் படிப்பவர்கள் பலன் பெறுவர்.தோல் நோய் வராது.சிந்தனைக்கு ஏற்ப சுப சந்தோஷ மேன்மையுண்டாகும். குடும்பத்தினர் மகிழ்வார்கள். பெண்களால் முன்னேற்றம் வரும்.

5.குருக்குரிய பரிகாரம்

வியாழனின் சமித்தாகிய அரச மரத்தின் புல்லுருவியை முறைப்படி பூஜை செய்து தாயத்தாக்கி அணியவும். வியாழனின் திசையில் தனதான்ய அபிவிருத்தி புத்திர சுகம்.குருவருள்.இறையருள் கிடைக்கும்.

6. சுக்கிரன் பரிகாரம்

சுக்கிரன் மூலிகையான கருஊமத்தன் செடிக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து எடுத்து வந்து. தாயத்தாக்கி அணியவும் நன்கு சிரத்தையுடன் தூபம் கொடுத்து வந்தால் சுக்கிரன் திசை முழுவதும் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம்,வீடு,நல்லதுணை அமையும்.சுக்கிரன் எந்த நிலையில் இருந்தாலும் திசை முழுவதும் நல்ல பலனைத் தரும்.அறுபத்தி நான்கு கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும் இயல் இசை நாடகத்தில் கலைத்துறையில் முழு வெற்றி கிடைக்கும்.

7.சனி பகவானுக்குரிய பரிகாரம்

சனிபகவான் மூலிகையான செவ்வலரி வேரை முறைப்படி காப்புக்கட்டி பூஜை செய்து வடக்கு போகும் வேரை எடுத்து அணிந்து கொள்ள வெற்றிமேல் வெற்றி உண்டாகும். இது பெரும் சக்தியையும் சர்வ மேன்மையையும் தரும்.ஆயுள் முழுவதிலும் பலன் தரும். நினைத்ததை சாதிக்க வைக்கும்.ஏழரை சனி,அஷ்டமத்து சனி,கண்டச் சனி,விலக சர்வ சாபங்களும் விலகும்.சனி பகவான் திசை வருடம் பத்தொன்பதும் நல்ல பலன் கிட்டும்.

8. ராகுவுக்குரிய பரிகாரம்

இராகு மூலிகை எட்டி மரத்தின் வடக்கு போகும் வேருக்கு காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து அந்த வேறுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி இராகுவின் காயத்ரி மந்திரம் 1008 முறை ஜெபித்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள இராகு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும்.

9.கேதுக்குரிய பரிகாரம்

வேப்ப மரத்தின் வடக்கு போகும் வேருக்கு அசுவணி ,மகம்,மூலம் நட்சத்திரத்தில் காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள கேது பகவான் திசை முழுவதும் நல்ல பலன் தரும் .வாழ்வில் பிடிப்பு இல்லாதவர்கள் வீட்டில் துன்பம் ,துயரம் உள்ளவர்கள், நல்ல பெயரை எடுக்க இயலாதவர்கள் ,மேலதிகாரி தொல்லையுடையவர்களும், இம்மூலிகையால் இதன் மகிமையால் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனைத் தரும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

 

Sunday, August 11, 2024

துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க (Get rid of evil spirits and demons)

துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:


பேய் மிரட்டி இலைகளை எடுத்து திரிபோல் திரித்து,5 மண் அகல் விளக்கில் ஐவகை எண்ணெய் ஊற்றி,அதில் இந்த இலை திரியை இட்டு செவ்வாய்கிழமைகளில் விளக்கேற்றி வர அவ்விடத்தில் உள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலகி ஒடிவிடும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


...,..................................


Get rid of evil spirits and demons:


Take the ghostly leaves and twist them into a wick, pour five types of oil into a 5-foot earthen lamp, put this leaf wick in it and light the lamp on Tuesdays, and the demons and evil spirits in that place will go away.


For communication 

Shri Kali Devi-Phone:+917598758989




Friday, August 9, 2024

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி

 

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் 108 போற்றியை செவ்வாய் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.

ஓம் அழகா போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் அரன் மகனே போற்றி

ஓம் அயன்மால் மருகா போற்றி

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

ஓம் பன்னிருகை வேலவா போற்றி

ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடர் களைவோனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஓம்கார சொருபனே போற்றி

ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி


ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி


ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் மூலப்பொருளே முருகா போற்றி

ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

ஓம் அறுபடை விடுடையவா போற்றி

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி

ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் மகா சேனனே போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி

ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி

ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி

ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி

ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி

ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி

ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி


ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி

ஓம் கலியுக வரதா கந்தா போற்றி

ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி

ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி

ஓம் சரவணபவ சண்முகா போற்றி

ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி

ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி

ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி

ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி

ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி

ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி

ஓம் யோக சித்தியே அழகே போற்றி

ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி

ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி

ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி

ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி

ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி

ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி

ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி

ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி

ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி

ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி

ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி

ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி

ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி

ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி

ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி

ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

ஓம் அருமையின் எளிய அழகே போற்றி

ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி

ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி

ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி

ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி

ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, August 2, 2024

அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்:



 

அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்:


கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.

கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.

அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.

ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.

ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.

பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.


ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:

ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர

பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,

தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய

நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,

ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,

க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.


முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்

குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள

கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்

தினமும் பதினெட்டு முறை கூறவும்.

ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.

அருள் வாக்கு மற்றும் குறி சொல்ல ஸ்ரீ கருப்புசாமி வசிய யந்திரத் தகடு,தாயத்து,வசிய மை,ரட்சைக் கயிறு மற்றும் தீட்ஷை வேண்டுவோர் அணுகவும்.


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989



Friday, June 7, 2024

செல்வ வளம் தரும் மஹாலட்சுமி யந்திரம்:


 செல்வ வளம் தரும் மஹாலட்சுமி யந்திரம்:


தாமிரத் தகடு அல்லது வெள்ளத் தகட்டில் முறையாக கீறி,மந்திர உருவேற்றிய மகாலட்சுமி யந்திரத்தகட்டை பூஜையறையில் வைத்து பூஜிக்க செல்வ வளம் தரும்,லட்சுமி கடாட்சமும்,குபேர சம்பத்தும் கிட்டும்.தனம்(பணம்),தான்ய விருத்தி உண்டாகும்.வீடு,மனை நிலபுலம் வாங்கும் யோகம் கைகூடும்.கடன் தீரும்.வீட்டில் வைத்து வழிபட வேண்டிய யந்திரம் இது.


மஹாலட்சுமி யந்திரத் தகடு தேவைக்கு அணுகவும்.


தொடர்புக்கு:

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Sunday, June 2, 2024

பைரவர் கவச மந்திரம் :



 பைரவர் கவச மந்திரம் :


 மனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி என்பது அனைவரும் அறிந்ததே. தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இதே உலகில் துஷ்ட சக்திகளும் இருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை தீய மாந்த்ரீக கலை மூலம் ஒரு சிலர் தங்களுக்கு ஆகாதவர்களுக்கு செய்வினை போன்றவற்றை செய்கின்றனர். ஒரு சிலருக்கு எதிர்பாராத விதமான விபத்துகளும் ஏற்படுகிறது. இவையனைத்திலிருந்தும் காக்கும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு “பைரவர் கவச மந்திரம்” இது.


 பைரவர் கவச மந்திரம் :


"ஓம் நம கால்ரூபாய பதுக் பைரவாய நம ருத்ராய நம சிவாய ஓம் தம் தம் ஹம் ஹம் தம் தம் ஸ்வாஹ"

 

 காக்கும் கடவுளான பைரவரை வழிபடுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை உபாசித்து பைரவரின் அருளை பெற நினைப்பவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தியானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை மந்திர உரு போடுவது சிறந்ததாகும். பைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவர் சந்நிதியில் பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து நெய் விளக்கேற்றி இம்மந்திரத்தை 108 துதித்தால் செய்வினை மாந்திரீகம், துஷ்ட சக்திகள் பாதிப்புகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது நீங்கும். வாகனங்களில் பயணிக்கும் போது எதிர்பாரா விதத்தில் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும். தேவர்கள் அசுரர்களால் துன்புறுத்த பட்ட போது அவர்கள் அனைவரும் உலகை காக்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அசுரர்களை அழித்து தேவர்களின் துன்பம் நீங்க தனது அம்சமான பைரவரை தோன்ற செய்து அனுப்பினார் சிவபெருமான். பைரவர் திசைக்கு 8 வீதம் 64 வகையான பைரவர்களாக தோன்றி அசுரர்கள் அனைவரையும் அழித்தனர். எப்படிப்பட்ட துன்பங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவர் விளங்குகிறார் அவரை இம்மந்திரம் கொண்டு துதிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். 


உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும் 


தொடர்புக்கு 

ஸ்ரீகாளி தேவி-போன்:+91 7598758989