Thursday, September 14, 2017

கட்டு மந்திரம் ...!!!


கட்டு மந்திரம் ...!!!
“ ஓம் பைரவா, உத்தண்ட பைரவா,
ஏந்திய கபாலமும், ரத்தின மாலையும், நாக பாஷமும், போக வேஷ்டியும், ஸ்வாநத் வாகனமும்,
அடித்த தண்டும், பிடித்த பார்வையும், நேரிட்ட மேனியும்,
இதோ என் காளீக்களீள் எனக்கு அருள் செய்ய புறப்பட்டார்.
என்னுடைய பைரவனார் தன்மையைப் போல் யாம் இருப்போமென்று,
புத பிரேத பிசாசு கணங்களைக் கட்டு,
பிற்பில்லி சூன்யம் வஞ்சனை நோயைக் கட்டு,
இரும்பு வலையை உருக்கியே எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் கட்டு,
ஆகாசம் பு+மி அதிரவே கட்டு,
எமனைக் கட்டு , எமதுதரைக் கட்டு ,
நாட்டைக் கட்டு , நகரத்தைக் கட்டு ,
சந்தனப் பாடு தனித்தனியே கட்டு ,
சொப்பனப் பேய்களை சுட சுட கட்டு ,
அகார உகார ஈஸ்வர புத்திராய, வடுக நாதாய,
கிணி கிணி சற்வேத்நாய, ரண்டி ரண்டி அகோர வீர பத்திராய,
ஓம் குருவே நமசிவய சுவாஹா “

திக்கு கட்டு
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பு+மியை நோக்கினேனே பு+மி பு+டமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே.
உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம். ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது.
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சாபங்கள்


சாபம்
சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.:
பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம் : நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம் : பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம் : ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்: எல்லை தெய்வங்கள், மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, September 13, 2017

பள்ளி,கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்து விளக்க

பள்ளி,கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்து விளக்க-மாயக்கலவைர ருத்ராட்சம்:
இரண்டு நாட்களுக்கு முன்பு மியான்மார் இருந்து கல்லூரி விரிவுரையாளர் என்னை தொடர்பு கொண்டு கல்வித்துறையில் சிறந்து விளங்க என்ன ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று கேட்டார்.அதற்க்கு
4 முக ருத்ராட்சம் + 6 முக ருத்ராட்சம் சேர்த்து அணிய வேண்டும்.
4 முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் புதன்.இது பிரம்மனைக் குறிக்கிறது.படைப்பாற்றல் சக்தியை உருவாக்கும்.
6 முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் சுக்கிரன்.இது கார்த்திக்கேயனைக் குறிக்கிறது.வசீகர சக்தியைக் கொடுக்கிறது.
இந்த இரண்டையும் சேர்த்து அணியும்போது நல்லறிவு,கூர்ந்த மதி புத்தி சாதுர்யம்,ஞாபக சக்தி,மனத்திட்பம்,திடமான மனம்,வசீகர சக்தி ஆகியவை மேம்படும்.
யார் எல்லாம் அணியலாம்?
மாணவர்கள்,ஆசிரியர்கள்,அறிவியாலாளர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,மேலாளர்கள்,நிர்வாகிகள்,வணிகர்கள்,பேச்சாளர்கள், இவர்கள் அணிய வெற்றியையும்,வெகு ஜன தொடர்பையும்,நற்பலன்களையும்கொடுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நவகோள் பரிகாரங்கள்


நவகோள் பரிகாரங்கள்
1.சூரியனுக்குரிய பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டி கோதுமை தோசை போன்றவற்றை செய்து தானும் சாப்பிடலாம். வீட்டுக்கு வரும் உறவினர்க்கும் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கோதுமை அல்வா வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்தலாம். இதனால் மேலதிகாரிகள் கோபம் தணியும் .அரசு சம்பந்தமான காரியங்கள் கை கூடும்.
2. சந்திரனுக்குரிய பரிகாரம்
பலா மரத்தின் வடக்கு போகும் வேரை பூச நட்சத்திரத்தில் அல்லது அமாவாசை ஞாயிற்றுக்கிழமை கூடிய சுபதினத்தில் காப்புக் கட்டி எடுத்து வந்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள சந்திர திசை முழுவதும் நலம் தரும்.
3.செவ்வாய் பகவானின் மூலிகையான சிவனார் வேம்பை முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி எடுத்து அணிந்து கொள்ள அதிகார பதவி கிட்டும். உடல் நலம் தேறும்.எதிரிகள் சரணடைவார் .உறவுகள் மேம்படும்.எதிலும் முக்கியத்துவம் கிட்டும்.செவ்வாயின் திசை முழுவதும் பலன் தரும்.சகோதரர்கள் நலம் பெறுவார்.
4.புதனுக்குரிய பரிகாரம்
புதனுக்குரிய இருவேலி மூலிகை அல்லது செந்நாயுருவி வேருக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி உயிர் கொடுத்து பூஜையில் வைத்து புதன்கிழமை புதன் ஓரையில்( காலை 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள்) தாயத்தாககி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். இதனால் படிப்பவர்கள் பலன் பெறுவர்.தோல் நோய் வராது.சிந்தனைக்கு ஏற்ப சுப சந்தோஷ மேன்மையுண்டாகும். குடும்பத்தினர் மகிழ்வார்கள். பெண்களால் முன்னேற்றம் வரும்.
5.குருக்குரிய பரிகாரம்
வியாழனின் சமித்தாகிய அரச மரத்தின் புல்லுருவியை முறைப்படி பூஜை செய்து தாயத்தாக்கி அணியவும். வியாழனின் திசையில் தனதான்ய அபிவிருத்தி புத்திர சுகம்.குருவருள்.இறையருள் கிடைக்கும்.
6. சுக்கிரன் பரிகாரம்
சுக்கிரன் மூலிகையான கருஊமத்தன் செடிக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து எடுத்து வந்து. தாயத்தாக்கி அணியவும் நன்கு சிரத்தையுடன் தூபம் கொடுத்து வந்தால் சுக்கிரன் திசை முழுவதும் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம்,வீடு,நல்லதுணை அமையும்.சுக்கிரன் எந்த நிலையில் இருந்தாலும் திசை முழுவதும் நல்ல பலனைத் தரும்.அறுபத்தி நான்கு கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும் இயல் இசை நாடகத்தில் கலைத்துறையில் முழு வெற்றி கிடைக்கும்.
7.சனி பகவானுக்குரிய பரிகாரம்
சனிபகவான் மூலிகையான செவ்வலரி வேரை முறைப்படி காப்புக்கட்டி பூஜை செய்து வடக்கு போகும் வேரை எடுத்து அணிந்து கொள்ள வெற்றிமேல் வெற்றி உண்டாகும். இது பெரும் சக்தியையும் சர்வ மேன்மையையும் தரும்.ஆயுள் முழுவதிலும் பலன் தரும். நினைத்ததை சாதிக்க வைக்கும்.ஏழரை சனி,அஷ்டமத்து சனி,கண்டச் சனி,விலக சர்வ சாபங்களும் விலகும்.சனி பகவான் திசை வருடம் பத்தொன்பதும் நல்ல பலன் கிட்டும்.
8. ராகுவுக்குரிய பரிகாரம்
இராகு மூலிகை எட்டி மரத்தின் வடக்கு போகும் வேருக்கு காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து அந்த வேறுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி இராகுவின் காயத்ரி மந்திரம் 1008 முறை ஜெபித்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள இராகு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும்.
9.கேதுக்குரிய பரிகாரம்
வேப்ப மரத்தின் வடக்கு போகும் வேருக்கு அசுவணி ,மகம்,மூலம் நட்சத்திரத்தில் காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள கேது பகவான் திசை முழுவதும் நல்ல பலன் தரும் .வாழ்வில் பிடிப்பு இல்லாதவர்கள் வீட்டில் துன்பம் ,துயரம் உள்ளவர்கள், நல்ல பெயரை எடுக்க இயலாதவர்கள் ,மேலதிகாரி தொல்லையுடையவர்களும், இம்மூலிகையால் இதன் மகிமையால் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனைத் தரும்.

Tuesday, September 12, 2017

எந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்


எந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்!!!
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.
விருச்சகம்:
விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு சூட்சும பரிகாரங்கள்


வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு சூட்சும பரிகாரங்கள்
காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.
புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அரசியல்,மற்றும் சினிமாத் துறையில் வெற்றி வாகை சூட மாயக்கலவை ருத்ராட்சங்கள்:

அரசியல்,மற்றும் சினிமாத் துறையில் வெற்றி வாகை சூட மாயக்கலவை ருத்ராட்சங்கள்:
அரசியல்வாதிகள்,தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள்,மார்க்கெட்டிங் துறையில் உள்ளோர்களுக்கு ஏற்றது 13 முக ருத்ராட்சம்.இத்துடன் 6 முக ருத்ராட்சம் சேர்த்து அணிய மக்கள் மனதில் மிக எளிதில் இடம் பிடித்து,வசீகரித்து வெற்றி வாகை சூடலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989