Monday, November 13, 2017

இரசமணி ஓர் அறிமுகம்


இரசமணி ஓர் அறிமுகம்
சிவா பெருமானின் விந்து என்று சொல்லப்படும் பாதரசத்தை மூலிகைகள் மற்றும் உப்புகளாலும் சுத்தி செய்து "ஏழு " சட்டைகளையும் "எட்டு" தோஷங்களையும் நிவர்த்தி செய்து இறுக்கி மணியாக்கி அணிந்து கொள்ள சிவா பெருமானே நம்மோடு இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர்.
"இகுந்து பார்" சூதத்தை(பாதரசம்) எவ்வண்ணதாலும் இறுக்கியவன் "தேவனடா" இடுக்கமில்லை என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
அவ்வளவு மகத்துவம் வாய்ந்த இரசமணி இருக்க நம் எதற்கும் பயப்பட தேவையில்லை. தவிர இது "விதியாளி அறிவான் பாடு" என்று சித்தர்களின் சொல்லுக்கு ஏற்ப யார் இதை பெறுவதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளதோ அவர்களுக்கே கண்டிப்பாக கிடைக்கும்
ரசமணியின் பயன்கள்
வசியரசமணி : முகவசியம், தொழில் வசியம், வியாபார வசியம், சத்தவசியம், ஜனவசியம் முதலியவைகள் இந்த மணியால் சித்தியாகும்.
மோகன வசியம்
மோகனரசமணி : லக்ஷ்மி கடாசியம், ஐஸ்ய்வர்யம் உண்டாகவும் சொத்து பிரேச்சனைகள் தீரவும், கடன் தொல்லையிருந்து விடுபடவும் , கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு நீங்கவும், மேலதிகாரிகள் அன்பாக நடக்கவும் இந்த மோகனரசமணி உதவும்.
உச்சாடான ரசமணி
எதிரிகள் நம்மை விட்டு நீங்கவும் பில்லி , கண்யம், செய்வினை, தாண்டும் குணம் போன்ற தீய மந்திர சக்திகள் தம்மை விட்டு விலகிபோகவும் கொடிய நோய்களும் பூர்வ ஜென்ம பாவங்களும் நம்மை விட்டு விலகிப்போக இந்த உச்சாடான ரசமணி உதவும்.
ஸ்தம்பன ரசமணி
உடல் உறவில் திருப்தி இல்லாதவர்களுக்கு சொப்பன கலிதம், துரித கலிதம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த ஸ்தம்பன ரசமணி உதவும்
சர்வ வசியம் தரும் - இரசமணி :
முறைப்படி கன்னிநூல் காப்புகட்டி, சாப நிவர்த்தி செய்து கொண்டு வந்த ஜோதிப் புல்லைக் கல்வத்தில் போட்டு மைப்போல் அரைத்துக்கொள்ளவும், ஒரு பலம் பாதரசம் எடுத்து , அரைத்த ஜோதிப்புல் விழுதில் வைத்து, மண் சீலை செய்து பத்து எருவில் ( பசு சாணத்தில் தட்டிய வரட்டி ) புடம் போட்டு, புடம் ஆறிய பின் எடுத்தால் பாதரசம் கெட்டிப்பட்டு கல் போல் இருக்கும். இதற்கு மேல் மீண்டும் ஜோதிப்புல் அரைத்து அதனுள் வைத்து மண்சீலை ( மண் கவசம் ) செய்து பத்து எருவில் புடம் போடவும். புடம் ஆறிய பின் எடுத்து மீண்டும் இருபது முறை புடம் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை குகையில் வைத்து ஊத உருகி மணியாகும். இதை பால், தேன் இவைகளில் போட்டால் அதை உறிஞ்சி குடிக்கும். இந்த மணியை வாயில் போட்டுக்கொண்டு உமிழ்நீரை சாப்பிட விந்து கட்டும் உடலுறவில் லேசில் விந்து வெளிப்படாது. உடலில் உள்ள தாதுக்கள் கட்டும். நரை, திரை விலகி உடல் காயசித்தி ஆகும்.
இந்த இரசமணியை லட்சம் உரு வசிய மந்திர உரு ஏற்றி வைத்துக் கொண்டால் சர்வ ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம் முதலியன உண்டாகும். இந்த இரசமணியால் - இலட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த இரசமணியை இடுப்பில் கட்டி பெண்ணை புணர்ந்தால் போகசக்தி அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Sunday, November 12, 2017

தொழில் விருத்தி தரும் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்


தொழில் விருத்தி தரும் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி மந்திரம்


ஒரு கும்பத்தில் நீர் நிரப்பி அதில் இரண்டு ஏலக்காய்,இரண்டு கற்கண்டு, சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு,ஒரு மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து அதில் 11 மாவிலைகளைச்   சுற்றி வைத்து கும்பத்திற்குப் பூச்சூடவும்.வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு வாழை இலையில் மஞ்சள் பொடியால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அந்தச் செம்பை அதன் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும். 

நைவேத்தியமாக வெல்லம்,தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பழங்கள் வைக்கவும்.மல்லிகை,பிச்சி (முல்லை ) அல்லது வாசனை உள்ள ரோஜாப் பூக்கள் ஜெபத்திற்கு உகந்தவை.

ஜெபம் முடிந்ததும் ஜெபம் யாருக்காகச் செய்யப்பட்டதோ அவர் தன் மீது அந்த கும்பதீர்த்தத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்துக் கொள்ளவும்.பின் கும்பதீர்த்தத்தை  தொழிற்சாலை,கடை முழுவதும் தெளித்து விடவும்.சர்வ பீடை,கண் திருஷ்டி,தரித்திரம் நீங்கி லாபம் கொழிக்கத் துவங்கும்.

இந்தப் பூஜையைத் தீபாவளி,நவராத்திரி,மாதப்பிறப்பு போன்ற ஏதாவது சுப தினங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 தடவை செய்து வர நிறைவான பலன்களை எதிர்பார்க்கலாம்.   

மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் லக்ஷ்மீ | துர்பாக்ய நாசினி சௌபாக்ய ப்ரதாயினி |
ஸ்ரீம் ஸ்வாஹா ||

Wednesday, November 8, 2017

ஐயப்ப சாமிகளுக்கான பயண விதிமுறைகள்


ஐயப்ப சாமிகளுக்கான பயண விதிமுறைகள்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப சாமிகள் பின்பற்ற வேண்டிய பயண விதிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் கீழே பார்க்கலாம்.
1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணி பவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.
2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.
3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவ மடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்திலி ருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங் களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும் போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.
5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பு-ம் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர் மசாஸ்தாவிடம் முழுப் பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்க வேண்டும்.
7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனை களில் கலந்து கொண்டு வாய் விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.
8.படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
9.களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
10 .எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.
11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, ‘சாமி சரணம்’ எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் ‘சாமி சரணம்‘ எனச் சொல்ல வேண்டும்.
12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தி னாலும் உணவு அருந்தக்கூடாது.
13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப் புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.
14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் ‘நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்’ என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது ‘போய் வருகிறேன்’ என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பத்தியுணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.
15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.
16. மாலையணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.
17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக் காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.
18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார் களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக்கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டியதிருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.
19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்த ப்பெண்களைக் கண்டா லும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக் கான பெண்களை காணக் கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.
20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.
22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலி ருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.
23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வய தான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.
24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.
25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர் களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.
26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப் பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பி யதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக் கும் கொடுக்கவேண்டும்.
28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர் களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண் டிய சமயங்களி லெல் லாம் ஐயப் பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக் கேற்றவாறு கொடுத்து குரு வின் அருளைப் பெற லாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந் தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும் பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.
30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள். என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டு களிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.
31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.
32. யாத்திரை இனிது நிறைவேறியதும் குரு நாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

திருவம்பலச் சக்கரம்:

திருவம்பலச் சக்கரம்:
ஆதி சதாசிவமும்,சக்தியும் இனைந்த மந்திர எழுத்துக்களின் உருவம் பெற்ற யந்திரம் தான் திருவம்பலச் சக்கரம் ஆகும்.
ஒப்பில்லா சிவனருளைப் பரிபூரணமாகத் தன்னுள் அடக்கி, உலகம் செழிக்க உன்னதமான பலன்களை அள்ளி வழங்கும் அற்புதம்தான் திருவம்பலச் சக்கரம்.
திருமூலர் அருளிய இந்த சக்கரத்தை, 'சித்துக்கள் ஆடுகின்ற சிதம்பரச் சக்கரம்’ என்று ஞானியர் பலரும் போற்றியுள்ளார்கள். சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, பெருமானின் மகா மூல மந்திர தத்துவங்கள் அடங்கிய இந்த சக்கரத்தை முறையாக எழுதி வாங்கி, உரிய தீட்சை முறையை எளிய வகையில் உபதேசமாகப் பெற்று ஜபம் செய்து வந்தால், அனைத்துச் செயல்களிலும் வெற்றி வந்து சேரும் என்கிறது சிவபூஜா ரகஸ்யம்.
இந்த சக்கரத்தில், சிவனாரே அருளிய சிவசிந்தாமணி மூல மந்திரமும் அடங்கியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு! சிவபெரு மானைப் புகழும் சமக மந்திரம், 'பஞ்சாட்சர மூலம் அடங்கிய திருவம்பலச் சக்கரத்தில் உள்ள சிவாய நம என்ற எழுத்துக்களைக் கோர்வை செய்து ஜபிப்பவர்களுக்கும், பூஜிப்பவர்களுக்கும் நலம் பல விளையும்’ என்று விவரிக்கிறது.
சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை ஜபயோக கர்ம விதியின்படி சிவ தீட்சை பெற்று, ஒரு லட்சம் முறை நம்பிக்கையோடு ஜபித்து வழிபட ஸித்திகள் பலவும் கிடைக்கும்.
அம்பலச்சக்கர பூஜை முறை:
பொதுவாக சித்தர்களின் போதனா முறையைப் பின்பற்றுபவர்கள், தமிழ் மறைப் பாடல்களை பாடும் முற்றோதுதல் வழிபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். சிவாகம விதியைப் பின்பற்றுபவர்கள், ஆகம பூஜா விதிகளை வீட்டில் கடைப்பிடித்துச் செய்வதே முறையான வழிபாடாக அமைகிறது. பொது இடத்தில் வழிபாடு நடத்துபவர்கள் முற்றோதுதல் முறையையும், தனிப்பட்ட முறையில் குடும்ப நலனுக்காக செய்பவர்கள், ஆகம பூஜையையும் செய்யலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுதினமும் எளிய வகையில் செய்தால் போதுமானது.
தங்கம், வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில், இந்தச் சக்கரத்தை எந்தவித பின்னமும் ஏற்படாமல் கவனமாக எழுதி எழுத்தாணியால் வரைந்து கொள்ளவும். (சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, உரிய முறைப்படி வரைந்து வாங்குவது சிறப்பு). பின்னர், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரோசணை, புனுகு, அத்தர் ஆகியவற்றை நெய் கலந்து பூசி, ஒரு தட்டில் வெண்பட்டு விரித்து அதன் மேல் தகட்டை வைத்து, சந்தன- குங்குமம் வைத்து பூஜை அறையில் இடம்பெறச் செய்யலாம்.
சிவராத்திரி, சோமவாரம் முதலான சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் பூஜிக்கத் துவங்குவது சிறப்பு.
முதலில் விநாயகரை வழிபட்டு வணங்கவேண்டும். பின்னர் சிவபெருமானை மனத்தால் தியானித்து வணங்கி, கீழ்க்காணும் சிவநாமங்களைக் கூறி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து திருவம்பலச் சக்கரத்தை வழிபடலாம்.
ஓம் பவாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் ஈசானாய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் சர்வாய நம:
ஓம் ஸ்தானவே நம:
ஓம் உக்ராய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் மகாதேவாய நம
வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்ட பிறகு, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நெய் இட்ட சாதத்தை நிவேதனம் செய்து, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வணங்கவும். எளிய முறையில் வழிபடுவோர் பூஜையின்போது கீழ்க்காணும் காயத்ரீ மந்திரம் மற்றும் துதிப்பாடலைப் படித்து வழிபட்டும் பலன் பெறலாம்.
காயத்ரீ
ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி.
தந்தோ சிவ: ப்ரசோதயாத்
துதிப்பாடல்...
கங்கைவார் சடையாய் கணநாதா
காலகாலனே காமனுக்குக் கனலே
பொங்குமால் கடல்விடம் இடற்றானே
பூதநாதனே புண்ணியா புனிதா
செங்கண்மால் விடையாய்த் தெளிதேனே
தீர்த்தனே திருவாவடுதுறையுள்
அங்கணா எனை அஞ்சேல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே!
எல்லோரும் திருவம்பலச் சக்கரத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென சொல்லப்பட்ட எளிய கட்டுப் பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். லாகிரி- புகையிலை வஸ்துகளை பயன்படுத்தாமை, தெய்வ நிந்தையை தவிர்ப்பது, புலன் அடக்கம் ஆகியவை அவசியம்.
திருவம்பலச் சக்கரம் பற்றி மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Friday, October 20, 2017

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்


குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்

ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்


வளர்பிறை புதன்கிழமை அன்று தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.

கிழக்கு பார்த்து ஜெபிக்கவும்.

ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுதும் அருகம்புல்லால் கணபதி படம் அல்லது சிலைக்கு அர்ச்சிக்கவும்.

என் மகன் / மகள் (உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்கவும் .

வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

பன்னிரண்டு முக ருத்ராட்சம்(துவாதச ருத்ராட்சம்):


பன்னிரண்டு முக ருத்ராட்சம்(துவாதச ருத்ராட்சம்): 
இந்த ருத்ராட்சம் சூரியக் கடவுளைக் குறிக்கும்.இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர்.இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும் பலத்துடன்,பிறரை ஆட்சி செய்து வருவர்.இந்த பன்னிரண்டு முக ருத்ராட்சத்தை மந்திரிகள்,அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள்,வணிகர்கள்,நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள்,ஆன்மீகப் பலம் வேண்டுவோர் போன்றவர்கள் அணிய வெற்றி மேல் வெற்றியும்,ஆளும் திறமையும் கிட்டும். இது வியத்தக்க வகையில் பலனளிக்க வல்லது."ஓம் நமசிவய" ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

பண வரத்து பெருக பரிகாரம்


பண வரத்து பெருக பரிகாரம்: ஒவ்வொரு மாதமும் வரும் பரணி நட்சத்திரத்தன்று முடிந்தளவு,சர்க்கரை மற்றும் கல்உப்பு வாங்கி வீட்டில் வைக்க பண வரத்து பெருகும். ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989