Wednesday, November 29, 2017

வலம்புரி சங்கு:


வலம்புரி சங்கு:
பல நாட்கள் தேடலுக்கு பின்னர்,மிக மிக அரிதாக கிடைக்ககூடிய இந்தியன் வலம்புரி சங்கு 2 மட்டும் கிடைத்துள்ளது.
சகல செல்வங்களையும்,ஐஸ்வர்யங்களையும் தந்து அருள்பவை வலம்புரி சங்கு.இது மகாலட்சுமியின் அம்சமாகும்.
இந்தியன் வலம்புரி சங்கு தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

ஒன்பது முக ருத்ராட்சம்:


ஒன்பது முக ருத்ராட்சம்:
ஒன்பது முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் கேது பகவான்.இது அன்னை பராசக்தி,அத்யா சக்தியாகிய நவதுர்க்கை,நவகாளியின் அம்சமாகும்.இதனை அணிவோருக்கு வாழ்க்கையின் வெற்றிக்கான சக்தி,ஆற்றல்,செயல் திறமை கிடைக்கும்.மேலும் நிதானம்,பொறுமை கிடைக்கும்.பலமொழி பேச்சு,இலக்கண இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்கு பன்முக வளர்ச்சி உண்டாகும்.
மேலும் பயஉணர்வு,அச்சம்,எதிர்மறை எண்ணங்கள் நீங்கி பராசக்தியின் பரிபூர்ண அருள் கிட்டும்.சிவனை வழிபடுவர்களுக்கு 5 முக ருத்ராட்சம் எப்படியோ,அதேபோல் சக்தியை வழிபடுவர்களுக்கு 9 முக ருத்ராட்சம் தான் சிறப்பானவை.
அஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரக்காரர்கள் அணிய வேண்டிய ருத்ராட்சம் இது.
ஒன்பது முக ருத்ராட்சம் அரிதானவை,இதை அணிவோருக்கு சகல நன்மைகளும் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

கடன் தொல்லையிலிருந்து விடுபட


கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்
கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்
அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்?
மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.
மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்-கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும்.
கடகம்
ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.
சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.
கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.
தனுசு
வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.
மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.
கும்பம்
வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.
மீனம்
தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்-குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்


கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்
"ஓம் ஹரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி
ஸ்திரி புருஷ வசிகரி கிலீம் கிலீம் மமவசம் குருகுரு சுவாகா"
பச்சை கற்பூரத்தை இடதுகையில் வைத்துக்கொண்டு
மேற்படி மந்திரத்தை 32 செபித்து பாலில் கலந்து
மனைவி கணவனுக்கோ,கணவன் மனைவிக்கோ யார் மந்திரம்
செபித்து கொடுகிறார்களோ அதை குடிப்பவர்கள்கொடுத்தவரின்
சொல்கேட்டு அதன்படி நடந்து கொள்வர்.
இதே போல்இம்மந்திரத்தை பாதம்பிசினை உழுந்தளவில் உருட்டி
இடதுகையில் வைத்துக்கொண்டு மன ஓர் நிலையோடு மந்திரத்தை
32 உரு செபித்து சொன்னபடி கேட்காத பிள்ளைகளுக்கு பாலில் கலந்து
கொடுக்க உன் சொல்கேட்கும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, November 28, 2017

தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்


தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.
சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.
ராமர் கணையாழி
ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.
கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.
பிள்ளையார் சுழி
கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன் உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது. சுதர்சன சக்கரத்திற்கும் முந்தையதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது.
நட்சத்திர பாகங்கள்
அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.
* அசுவினி, பரணி, கிருத்திகை - நெற்றி.
* ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை - முகப்பகுதி.
* புனர்பூசம், பூசம் - இரு தோள்கள்.
* ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் - மார்பு பகுதி.
* சித்திரை - வயிற்று பகுதி.
* சுவாதி, விசாகம் - புஜங்கள்.
* அனுசம் - உடலின் மைய பகுதி.
* கேட்டை, மூலம் - இரண்டு கைகள்.
* பூராடம், உத்திராடம் - இரண்டு தொடைகள்.
* திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - கால் பாதங்கள்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோமதி சக்கரத்தின் சிறப்பு
* வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.
* கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.
* வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.
* கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
* மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.
* ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.
* கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.
* கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
* கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
பலன்கள்:
1] வீட்டில் வாஸ்து தோஷம் விலக மற்றும் திருஷ்டிகள்,துஷ்ட சக்திகள் அணுகாதிருக்க,11 கோமதி சக்கரம் சங்கை துணியில் கட்டி வாசற்படியில் கட்ட பலன் கிடைக்கும்.
2] பணம் வரவு உண்டாக:
13 கோமதி சக்கர சங்கை சிகப்பு துணியில் கட்டி ஈசானிய மூலை அல்லது கல்லாப் பெட்டியில் வைக்க பணம் வரவு பெருகும்.சேமிப்பு உண்டாகும்.
3]தெய்வ வசியம்,தொழில் வசியம் உண்டாக:
15 கோமதி சங்கை வீடு/தொழிலங்களில் வைத்து பூஜிக்க தெய்வ கடாட்சம் உண்டாகி தொழில் வியாபார விருத்தி உண்டாகும்.தொழில் வளம் பெருகும்.உடல் நோய்கள்,கால சர்ப்ப தோஷம் விலகும்.
பூஜித்த கோமதி சக்கரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, November 21, 2017

சக்தி வசியம்


சக்தி வசியம்:
பூச நட்சத்திரம் வரும் வெள்ளிகிழமை தினத்தில் விஷ்னுகிரந்தி செடிக்கு காப்பு கட்டி பொங்கலிட்டு பூஜை செய்து வேர் அறாமல் பிடுங்கி குளிசத்தில்(தாயத்தில்) அடைத்து வெள்ளை புஸ்பத்தினால் அலங்காரம் செய்து மூல மந்திரத்தை 1008 உரு கொடுத்து குளிசத்தை கட்டிகொள்ள ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, பூதம் எல்லாம் விலகும்.
சக்தி மூல மந்திரம்
ஒம் இம் கம் ரம் ரங்சிங் ஆயி டாகினி மாகினி விஷ்ணு சகோதரி சர்வாணிதேவி பராசக்தி நமசி ஸ்வாஹா.
Note:குளிசம் என்பது தாயத்து ஆகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

சாளக்கிராமம் கல்

சாளக்கிராமம் கல் :
யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன்.
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். "என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள்.
அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. "அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. கிருஷ்ண அவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன்.
அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.
இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள்பாலிப்பேன்" என்றார். "யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன்.
அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார் சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன..? மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.
இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.
சாளக்கிராமம் கல் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989