தனிநபர்கள் தங்கள் கடனை அடைக்க அணுகூலமான- மைத்ர முகூர்த்தங்கள்
வாஸ்து நேரத்திற்கு எப்படி ராகு காலம் எமகண்டம் விதி விலக்கோ அதுபோல மைத்ர முகூர்த்த நேரத்திற்கும் விதிவிலக்கு உண்டு.
மேஷம்- வியாழன் காலை 9 முதல் 10 வரை
ரிஷபம்- வெள்ளி காலை 8 முதல் 10 வரை
மிதுனம்- புதன் காலை 7 முதல் 9 வரை
கடகம்- திங்கள் மாலை 4 முதல் 6 வரை
சிம்மம்- ஞாயிறு காலை 11 முதல் 12.30 வரை
கன்னி- வெள்ளி மாலை 5 முதல் 6 வரை
துலாம்- சனி காலை 10 முதல் 12 வரை
விருச்சிகம்- வியாழன் மாலை 3 முதல் 5 வரை
தனுசு- செவ்வாய் காலை 10 முதல் 12 வரை
மகரம்- சனி காலை 3 முதல் 10 வரை
கும்பம்- திங்கள் மாலை 3 முதல் 5 வரை
மீனம்- வியாழன் காலை 3 முதல் 10 வரை
கடன்களைத் தீர்க்க மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். நேரத்தைப் பயன்படுத்தியே அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லர் முன்னுக்கு வந்தார். பிரபல அமெரிக்க கோடீஸ்வரர் கசோகி- சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததால் செல்வந்தராக இருக்கிறேன் என்றார். ஆம்! நேரத்தை வகுத்து எடுத்து சரியான மைத்ர முகூர்த்தத்தை பயன்படுத்துங்கள் வெற்றி காணுங்கள்.
கடன் ஏற்பட காரணம் பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கை காரணமாக கடன் ஏற்படும். தனகாரகன் குரு, தனஸ்தான கிரகம் பலம் குறைந்து நீச்சம் பெற்று 6, 8, 12ல் மறைந்தால் பொருளாதார பிரச்னைகள் இருக்கும். ஆனாலும் அந்தந்த காலகட்டங்களில் வரும் திசா புக்திகள்தான் கடன் சுமை பிரச்னை அதிகமாவதற்கு காரணம். ஆறாம் அதிபதியுடன் சேரும் கிரகங்கள் மூலம் கடன் பிரச்னைகள் ஏற்படும். ஆறாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் குடும்ப செலவு, சுப விஷயத்துக்காக கடன் வாங்க நேரிடும். மூன்றாம் அதிபதி சம்பந்தப்பட்டால் சகோதரர்களால் பணவிரயம் ஏற்படும். நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டால் நிலம், விவசாயம், உடல்நலக் குறைவு, தாய் மூலம் பணம் செலவாகும். ஐந்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் கல்யாணம், கல்வி வகையில் கடன் ஏற்படும். ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டால், மனைவி, நண்பர்கள் மூலம் செலவுகள் இருக்கும். எட்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் வீண் செலவுகள் வரலாம். அதே நேரத்தில் திடீர் யோகத்துக்கும் இடமுண்டு. ஒன்பதாம் அதிபதி சம்பந்தப்பட்டால் பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடும். தந்தையால் செலவுகள் இருக்கும். பத்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் மூலம் கடன் ஏற்படும்.
கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம். ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக... இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும்