மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு
மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை ஆவார்.
இதனால் மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இத்தகைய சக்தியை வசியம் செய்யும் போது நோய்நொடிகள் அண்டாது.
மற்றும் சகல நன்மைகளும் சகல பாக்கியமும் கிட்டும்.
தமிழகமெங்கும் பரவலாக மாரியம்மன் வழிபாடு காணப்படுகிறது.
மாரி - மழை. மாரியம்மன் வெம்மையைப் போக்கிக் குளிர்ச்சியைத் தருபவள், மழையாகப் பொழிந்து மண்ணில் உயிர்களைக் காப்பவள் என்ற நம்பிக்கையில் மழைத் தெய்வமாக வழிபடப்படுகிறாள். மாரியம்மன் வழிபாட்டுச் சடங்கின் போது சக்திக் கரகம் நீரால் நிரப்பப் படுவதும், அது அம்மனாக வழிபடப் படுவதும், வழிபாடு நிறைவடையும் நிலையில் கரகத்திலுள்ள நீர் நீர்நிலைகளில் விடப் படுவதுமாகிய செயல்கள் மாரியம்மன் மழைத் தெய்வமாக வணங்கப் படுவதற்குச் சான்றாக அமைகின்றன.
தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், சேத்தாண்டி வேடமிடுதல், முளைப்பாரி எடுத்தல் போன்றவை மாரியம்மனுக்காக மேற்கொள்ளப்படும் சடங்குகளாகவும் நேர்த்திக் கடன்களாகவும் விளங்குகின்றன.
மந்திரம் :
அரி ஓம் பகவதி திரிலோக பகவதி வசீகரி ஆனந்த கல்யாணி ஓம் தேவி வீரலெட்சுமி என் வாக்கிலும் என் மனதிலும் நிற்க நிற்கவே சுவாகா.
கிரியை :
மாரியம்மன் யந்திரம் முறையாக கீறி,அதனை வைத்து மந்திரம் செபிக்க வேண்டும்.
தினமும் சுத்தமாக ஸ்நானம் செய்து விளக்கேற்றி அம்மனுக்கு படையல் வைத்து வேப்பம் பத்திரம் சாத்தி நறுமலர்கள் வைத்து காலை
மாலை 108 உரு வீதம் 21 நாட்கள் செபிக்க அம்மன் வசியமாவாள்.வாக்கு பலிதம் உண்டாகி அருள்வாக்கு சொல்லும் சக்தி கிடைக்கும்.
மாரியம்மன் மந்திரம் மற்றும் யந்திரம் தீட்ஷை,அருள்வாக்கு சொல்ல குறி அஞ்சன மை தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989