Showing posts with label ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம். Show all posts
Showing posts with label ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம். Show all posts

Thursday, November 24, 2016

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்

ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி மந்திரம்
வைஷ்ணவத்தில் அன்னை ஸ்ரீ மகாலட்சுமி அருள் செய்வதைப் போலவே சைவத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி அருள் புரிபவள்.
சித்தர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வங்கள் வாலை,புவனை,திரிபுரை என்ற முப்பெரும் மகாசக்திகளே.அகஸ்தியர் தனது பல பாடல்களில் இவர்களது உபாசனை பற்றியும் எந்த வாழ்க்கை முறை உள்ளவர்கள் யாரை உபாசனை செய்து சித்தி பெறலாம் என்பது பற்றியும் விரிவாகவே கூறுகிறார்.
இம்மந்திரம் தந்திர சாஸ்திரத்தில் உள்ளது.இது விரைவான பலன்களைத் தரவல்லது.இம்மந்திரத்தை வளர்பிறைத் திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி அன்று துவங்கித் தொடர்ந்து ஜெபித்து வர வறுமை,கடன்,நோய்கள் அற்ற வளமான,நலமான வாழ்வு தருவாள். புவனேஸ்வரி யந்திரம் வைத்து வழிபட்டால் நல்லது.ஏன் என்றால் நாம் எல்லா நேரத்திலும் சுத்தமாக,ஆன்மீக விதிகளின்படி இருக்க இயலாது.எனவே யந்திரம் முன்னே வைத்து ஜெபித்தால் நமது மந்திர ஜெபத்தின் சக்தியை யந்திரம் உள்வாங்கி சக்தியைப் வீடு முழுவதும் பரப்பி வாழ்வை வளமாக்கும்.
பௌர்ணமி அன்று விசேஷமாக பூஜை செய்து நைவேத்யங்கள் படைத்து வழிபடவும்.மற்ற நாட்களில் இயன்றதைப் படைத்து வழிபடுங்கள்.
கீழே 3 மந்திரங்கள் உள்ளன இவற்றுள் எந்த மந்திரம் உங்களுக்கு இஷ்டமோ அதை ஜெபித்து வாருங்கள். அடிக்கடி மந்திரத்தை மாற்றாமல் ஜெபித்தல் நல்லது.
1. ஓம் ஸ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹா
2. ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை ஸ்வாஹா
3. ஸ்ரீம் ஹ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989