Sunday, November 19, 2017

அனுதினமும் வெற்றி பெற


அனுதினமும் வெற்றி பெற:
சுத்தமான செம்பு டம்ளரில் நீர் ஊற்றி,அதில் டீஸ்பூன் அளவு தேன் கலக்கவும்,கற்கள் எதுவும் பதிக்காத வெள்ளி அல்லது தங்கம் மோதிரத்தை அதில் போட்டு இரவில் மூடி வைக்கவும்.
காலையில் எழுந்ததும் முதல் உணவாக,மோதிரத்தை எடுத்து விட்டு அந்த நீரை அருந்தி வர நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.தினசரியும் செய்யலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்


நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்:
பவளம் என்பது ஒரு வகை கடல் வாழ் உயிரினமாகும்.இதில் வெண் பவளம்,செம்பவளம் என்று இரண்டு வகைகள் உண்டு.
யார் அணியலாம்?
செவ்வாய் கிரகத்தின் உலோகம் பவளம்.
மேஷம்,விருச்சிகம் ராசிக்காரக்கள் பவளம் அணிய தெய்வ கடாட்சம் கிட்டும்.கோபம் தணியும்.அதிர்ஷ்டம் உண்டாகும்.
மேலும் இந்த பவளத்தை தங்கம் அல்லது வெள்ளி அல்லது செம்பு மோதிரத்தில் பதித்து அணியலாம்.அதேபோல் 54 எண்ணிக்கையில் பவளத்தை எடுத்து மாலையாக கோர்த்து அணிய மேலும் சிறப்பாக இருக்கும்.
பலன்கள்:
°தெய்வ கடாட்சம் கிடைக்கும்
°கோபம்,ரத்த அழுத்தம் குறையும்
°அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்
°வீரம் விவேகம் அதிகரிக்கும்
°செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை,குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அணிய நிவர்த்தி உண்டாகும்
°நிலம்,கட்டிட பணிகள்,ரியல் எஸ்டேட் துறையினர் அணிய சிறப்பான பலன்கள் கிட்டும்.
°மன வலிமை,உடல் வலிமை உண்டாகும்.
°பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்க மாங்கல்யத்துடன் பவளம் சேர்த்து அணிய பலன் கிட்டும்.
ஒரிஜினல் பவளம் கற்கள்,பவள மாலை எங்களிடம் கிடைக்கும்.தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம்


இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம்:
திரிபலா சூரணம்- ஒரு காய கற்பம்
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே திரிபலா சூரணம்.அறுசுவையில் உப்பைத் தவிர்த்துத் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-கப தன்மையைச் சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலாவும் திரிகடுகமும் அற்புதமான சித்த மருந்துகள் ஆகும். சித்தர் கள் உடலை வலுவாக்கவும்,இரத்தத்தை சுத்திகரிக்கவும் இன்று உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Wednesday, November 15, 2017

ஆண்மைக் குறைவு நீங்க,ஆண்மை சக்தி அதிகரிக்க-"மதன காம சூரணம்":


ஆண்மைக் குறைவு நீங்க,ஆண்மை சக்தி அதிகரிக்க-"மதன காம சூரணம்":
விந்தணு குறைப்பாடு,விந்து நீர்த்து போகுதல்,முந்துதல்,ஆண்குறி எழுச்சியின்மை,வளர்ச்சியின்மை,போன்ற அனைத்து விதமான ஆண்மை குறைபாடுகளையும் குணமாக்கும்-இந்த "மதனகாம சூரணம்".
இது 11 மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து 1டீஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட ஆண்மைக்குறைபாடு நீங்கி போகசக்தியும்,ஆண்மை சக்தியும் அதிகரிக்கும்,குழந்தைப் பேறும் கிட்டும்.
தேவைப்படுவர்களுக்கு கூரியரில் பார்சல் அனுப்பி வைக்கப்படும்.
"மதனகாம சூரணம்" தேவைக்கு அணுக.
போன்:+917598758989


குன்றாத செல்வம் தரும் லட்சுமி குபேர பூஜை!


குன்றாத செல்வம் தரும் லட்சுமி குபேர பூஜை!
காசு, பணம், துட்டு, மணி, ரூபாய், டாலர், யூரோ எப்படிச் சொன்னாலும் சரி... எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுவது இதுதான்.
செல்வம் சேர்ந்துவிட்டால் மட்டும் போதாது. அது தேயாமல் பெருக வேண்டும். தொலையாத நிதியம் அதாவது கரையாமல் சேரும் செல்வம் வேண்டும் என்றுதான் அபிராமிபட்டரே அம்மனிடம் வேண்டுகிறார்.
உங்கள் வீட்டில் செல்வம் சேரவேண்டுமா? திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் சேர்ந்து குறைவற்ற பொருட்செல்வத்தை நீங்கள் பெற வேண்டுமா?
இதோ அதற்கான எளிய பூஜை முறை உங்களுக்காகவே தரப்பட்டிருக்கிறது.
ஸ்லோகம் சொல்வது, மந்திரங்களைப் படிப்பது, சுற்றிச் சுற்றி வலம் வருவது, ஏராளமான பூஜைப் பொருட்களை வாங்குவது இப்படி எதுவும் இந்த பூஜைக்கு வேண்டாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் அவசியம் வேண்டும். அது உண்மையான பக்தியும், நம்பிக்கையுடனான வழிபாடும்தான். இவற்றுக்கு நீங்கள் உத்தரவாதம் தந்தால் போதும். உங்கள் வீட்டில் செல்வமகள் நிரந்த வாசம் செய்வாள் என்பது நிச்சயம்!
பூஜையைத் தொடங்குவதற்கு சில முன்னேற்பாடுகள் அவசியம். முதலாவது, நீங்கள் பூஜை செய்யப்போகும் நாளைத் தேர்ந்தெடுப்பது.
தொடர்ந்து ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் குறிப்பிட்ட தினத்தில் செய்யவேண்டிய பூஜை இது. எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது மாதம் ஒருநாள் பௌர்ணமி தினத்தில் செய்வது சிறப்பு. உங்களுக்கு உகந்த தினத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். அதே சமயம் பூஜையைத் தொடர்ந்து ஒருவரே செய்வது நல்லது. இயலாத சமயத்தில் அதே குடும்பத்தின் வேறு உறுப்பினர் செய்யலாம். குடும்பத்திலுள்ள எல்லோரும் கலந்து கொள்வது மிகச் சிறப்பானது.
இரண்டாவதாகி இந்த பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாகச் சேர்த்து என்பத்தொரு நாணயங்கள் அவசியம். ஒரு ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ற தொகை வரையான காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் எண்பத்தொரு காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால் எண்பத்தொரு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. இதேபோல் உங்கள் வசதிக்கு ஏற்ப எண்பத்தொரு காசுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், நீங்கள் குபேர யந்திர பூஜை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
அடுத்து, செய்யும் பூஜை தடைபடாமல் நடக்கவும், குறைவிலா செல்வம் குறையற்ற வழியில் சேர்ந்திடவும் மகாகணபதியை மனதாரத் துதியுங்கள்.
அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை வரைந்து, எண்களையும் எழுதுங்கள். இந்தக் கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள "ஸ்ரீ' எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.
நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.
"தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!' என்று மனதார வேண்டுங்கள்.
மகாலட்சுமியே போற்றி! மங்கள லட்சுமியே போற்றி! தீபலட்சுமியே போற்றி! திருமகள் தாயே போற்றி! அன்னலட்சுமியே போற்றி! கிருக லட்சுமியே போற்றி! நாரண லட்சுமியே போற்றி! நாயகி லட்சுமியே போற்றி! ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!
என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.
தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.
அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.
அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள். (சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவனை நண்பனாகவும் ஏற்றவர். எனவேதான் சிவாலயத்திலும் செலுத்தலாம்!)
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.
ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.
போன்:+917598758989

Tuesday, November 14, 2017

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்


ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்
வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை ஸ்ரீ வராஹி யந்திரம் வைத்து 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
மூல மந்திரம்:
"ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா"
பூஜை முறைகள்:
வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.
இதன் பலன்:
தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Monday, November 13, 2017

பண கஷ்டங்கள் பறந்தோட:


பண கஷ்டங்கள் பறந்தோட:
தினசரி வெள்ளை நிற பூந்தியை புறாக்களுக்கு இட்டு வர பணக் கஷ்டங்கள் பறந்தோடும்,அதிலும் குறிப்பாக வெள்ளை புறாக்களுக்கு இட்டு வர உடனடி பலன் கிட்டும்.
அதேபோல் காக்கைக்கும் இட்டு வர கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989