குப்பை மேனி (பூனை வணங்கி)
1. ஒரு சிட்டிகை ச மூலச் சூரணம் நெய்யில் காலை, மாலை 1 மண்டலம் கொடுக்க 8 விதப் பவுத்திர நோயும் தீரும். பிற மருத்துவ முறையினால் சிக்கலான பவுத்திரத்திற்கு 1 வாரம் காலை மாலை 50 மி.லி அவுரி க் குடிநீர் கொடுத்துப் பின்னர் மேற்கண்ட சிகிச்சையை 70 முதல் 90 நாள்கள் செய்யப் பவுத்திர நோய்கள் அனைத்தும் தீரும்.
2 வேர்ச் சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல் ஒன்றாய்க் காய்ச்சிக் கொடுக்க நாடாப்புழு, நாக்குப் பூச்சி நீங்கும், பேதியாகும் , சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவும்.
3. இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.
4. இலைச் சூரணத்தைப் பொடி போல் நசிய மிட தலைவலி நீங்கும்.
5. இலை' , சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் களித்துக் குளிக்கத் தோல் நோய் அணைத்தும் தீரும்.
6, பத்து கிராம் வேரை மென்மையாய் அரைத்து நீரில் கலந்து காலையில் மட்டும் 3 நாள் குடித்து உப்பில்லாப் பத்தியத்தில் இருக்க எலிக்கடி நஞ்சு தீரும். மருந்து சாப்பிடும் போது வாந்தியும் வயிற்றுப் போக்கும் இருக்கும்
7. இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்துப் படர்தாமரை, சொறி, அட்டைக் கடி, பாம்பு, நச்சுப் பூச்சிக்கடி ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சாகத் தடவக்
குணமாகும்.