Tuesday, August 8, 2017

மாந்திரிகம் வசியம்

மாந்திரிகம் வசியம்
மாந்திரிகம் என்பது பழந்தமிழத்தில் புழக்கத்தில் இருந்த கலை. பெரும்பாலும் இதொரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. மருத்துவத்திலும் மாந்திரிகத்தின் பயன்பாடுகள் இருந்தன. காலப் போக்கில் மனிதனின் பேராசை இந்த கலையின் திறத்தையும், குணத்தையும் நிழலான காரியங்களின் பக்கம் மாற்றி வைத்தன.
சித்தர் பெருமக்களின் பாடல்க்ளின் ஊடே இந்தக் கலையைப் பற்றி உயர்வாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என கூறியிருக்கின்றனர். மேலும், அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கலையினை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை வகுத்துக் கூறியிருக்கின்றனர். இவற்றை மாந்திரிக அட்டமாசித்து அல்லது அட்டகன்மம் என்கின்றனர்.
வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் .ஆகியவையே மாந்திரிகத்தின் எட்டு நிலைகள். இவை குறித்தும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் இந்த அட்ட கன்மங்களைக் கொண்டு நோய்நொடிகள் பிரச்சனைகள் என்று தேடிவரும் மக்களுக்கு எவ்வாறு தீர்வுகளை கொடுக்கபட்டது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வசியம்.
வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதேயாகும். இந்த வசியக் கலையை பயன்படுத்தி எந்தவகையில் தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது "அகத்தியர் 12000" என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
வசியமாய்க் காரீயத்தகடு வாங்கி
வளமாக நயமவசி என்று மாறி
உண்மையுள்ள மாந்தருக்கு கட்டினாக்கால்
பசிதாக மானதுபோல் உனைக் கண்டோர்கள்
பணிவார்கள் வசியமதாய்ப் பண்பாய் மைந்தா
நிசிதமுள்ள மிருக தாவர சங்கங்கள்
நேர்மையுடன் வசியமதாய் வணங்கும்பாரே.
காரீயத்தகடு ஒன்றை எடுத்து, அதில் "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த காரீயத்தகட்டை கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வசிய மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு செபித்து முடிந்ததும், தீர்வும், தேவையும் உள்ளவர்கள் உடலில் இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களுக்கு மிருகங்கள் தாவரங்கள் வசியமாகுமாம். அத்துடன் அவர்களும் பண்பும் பணிவும் நிறைந்தவர்களாக நடந்து கொள்வார்கள் என்கிறார்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989