என்றால் என்ன? அதன் பயன் என்ன?..
திடமற்ற திரவ நிலை உலோகமான இது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய தாதுப் போருட்களில் ஒன்று. நீர்ச்சத்தும், காற்றும் ஒருங்கே அமையப் பெற்றது இந்தப் பாதரசம்.
பொதுவாக வெண்மை நிறத்துடன் கூடிய பாதரசத்தை நாம் பார்த்திருக்கிறோம். அனால் அதே போன்று சிகப்பு, மஞ்சள், வெளிர் நீலம் என பலவித நிறங்களிலும் உண்டு. ஆனால் இவை அபூர்வமாக கிடைப்பவை. இத்தகைய பாத ரசம் வாத வைத்தியத்தின் கூற்றுப்படி பாஷாண வகைகளில் ஒன்றாக சொல்லப் படுகிறது. பாஷாணப் பண்புகளை உள்ளடக்கி உள்ளதால் இதற்கு "சூதம்" என்று ஒரு பெயரும் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
வைத்தியத்திற்கு இரச பதங்கம், இரச பட்பம், இரச செந்தூரம் என்று பலவழிகளில் பயன்படும் இந்தப் பாதரசத்தை சற்று கடினமான உலோகமாக மாற்றி மணியாகச் செய்து கொள்வதே இரசமணி என்று அழைக்கப்படும். இந்த இரசமணியை உடலில் அணிந்து கொண்டோமானால், அதனால் நாங்கள் அடையும் பலன்கள் அதிகம். பாதரசத்தை மணியாக மாற்றுவது ரசவாதக் கலையின் ஒரு பகுதியே ஆகும். இதில் இருக்கும் நீரையும் காற்றையும் பிரித்தெடுப்பது தான் மிக இரகசியமாக கையாளப்படுவதுடன், மிக இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.
இந்த இரசமணியைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும். இதனால் இவைசம்பந்தப்பட்ட எந்த நோயும் உடலைத்தாக்காது பாதுகாக்கும்.
இந்த இரசமணிக்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால், நாம் எந்த சத்தை அதற்க்குக் கொடுக்கிறோமோ அதை உள்ளுக்கு இழுத்து பயன் தரும், இதனாலேயே யோக நிலைக்கு சென்று ஞானத்தை அடைய விரும்புபவர்கள், அதைப்பயன்படுத்தி ஞான நிலையை அடைந்தார்கள்.
இவ்வாறு பல அரிய பண்புகளை உள்ளடக்கிய பாதரசத்தை எவ்வாறு மணியாகக் கட்டி பயன்படுத்துகிறோமோ அவ்வாறே அது நமக்கு பலன் அளிக்கும். இதனைக் கட்டும் வழிமுறைகளை நமது சித்தர்கள் பலவாறாக கூறியுள்ளனர். இலகுவான முறை தொடக்கம் மிகவும் கடினமான முறை வரை அவரவர் தங்கள் குரு உபதேசித்ததை , தாங்கள் செய்து அனுபவம் அடைந்ததை அப்படியே ஒளிவு மறைவின்றி மக்கள் அறிந்து பயன் அடையும் விதமாக சொல்லித்தந்துள்ளனர்.
.............................................................................................
இவ்வளவு பயன்களைக் கொண்ட இந்த இரசமணியைக் கட்டுவது (தயாரிப்பது) எப்படி?
"காரமே சூதம்புண்யம் கற்பமாஞ் சாமஞ் சத்து
சூரியப கையாஞ் சாதிரு த்திரன் துள்ளியீசன்
வீரிய ஞ்சூழ்ச்சிநீராம் விண்ணீர் விண்ம ருந்து
சீர்பெறு மிரத மென்று செப்பி னார்ரொப் பிப்லோரே"
என்ற பாடலில் பாதரசத்திற்கு சித்தர்கள் சூட்டியுள மறை குறியீட்டு பேர்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
அவையாவன காரம் , சூதம், புண்ணியம், கற்பம், சாமம், விண்ணீர், வின்மருந்து , இரசம், என்று சொல்லப்பட்டுள்ளது.
இது போன்று பல சித்தர்கள் பாதரசத்தை புகழ்ந்துள்ளனர், அதில் முக்கியமானதாக நாம் எடுத்துக் கொள்வதாயின் மகா சித்தராகிய போகர் தனது சப்தகாண்டம் என்ற நூலில் பாதரசத்தை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்.. அது...
“ஆறியே சூதமஃ தை ந்துவித மாகும்
அதன் விபர மேதென்னி லறையக் கேளு
ஊறியே ரசமென்றும் இரசேந் திரமென்றும்
உற்றபா ரசமென்றுஞ் சூதமென்றும்
மீறியே மிசர கமென் றைந்து மாச்சு"
சூதம் ஐந்து வகையாச்சு அதன் விபரம் சொல்கிறேன் கேளு, இரசம் என்றும் , ரசேந்திரன் என்றும், பாரதம் என்றும், சூதம் என்றும், மிசரகம் என்றும் ஐந்து வகையாச்சு என்று சொல்கிறார். போகர் இவ்வாறு ஐந்து வகையாக பிரிப்பதற்குக் காரணம் அதன் தன்மைகளை கொண்டே.
.......................................................................................
“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்...
இரசம் :- இது சுத்தமான இரசத்தைக் குறிப்பதாகும், இலேசான சென்நிறமுடையது. குற்றமில்லாதது.
ரசேந்திரன் :- இது சற்று கருமை நிறம் படர்ந்தது. இதுவும் குற்றமில்லாதது.
பாரதம் :- இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது இது குற்றமுள்ளது, இதன் குற்றத்தை சுத்தி செய்தால் மட்டுமே ரசமணி கட்டப் பயன்படும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.
சூதம் :- இது சிறியளவு வெளிர் மஞ்சள் நிறமுடையது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும்.
மிசரகம் :- இது சற்று தாழ்ந்த நிலையில் உள்ளது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.
அது என்ன தோஷமும் , குற்றமும்? அதை எங்களால் நீக்கி ரசமணிகட்ட முடியுமா? அதை இலகுவாக நீக்க முடியுமா?... முடியும் சித்தர்கள் இலகுவான வழிகளை சொல்லி இருக்கிறார்கள்.
...........................................................................
இரசமணி கட்டும் எளிய முறைகள்...
சுரிங்கிடச் சூதம் கட்டும்
கருவூரார் சொல்லும் வழி இது…
சூதத்தைக் கட்ட எளிய மார்க்கம் ஒன்று சொல்கிறேன் கேளு, தாளி சாறு, விஷ்ணுகிரந்தி சாறு இரண்டையும் சேர்த்து சூதத்திற்கு சுருக்கிட சூதம் கட்டி மணியாகும்.
“முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு
முதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு
காட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்
ககனம்போற் திரண்டுருண்டு மணியுமாகும்”
சூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும்.
“காணும் சுத்தம் செய்த சூதம்
சுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும்.
இவையே ரச மணி கட்டும் இலகுவான வழிகளாகும்.
இந்த இரசமணி பற்றி சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான விடையம் என்ன வென்றால், பொதுவாக இரசமணி என்று சில போலி மணிகள் விற்பனையில் உள்ளதால் தூய ரசமணியைக் கண்டறிவது எப்படி? இதையும் சித்தர்கள் சொல்லியே சென்றுள்ளனர்.
……………………………………………………………………
சக்கரத்தை செம்புத் தக கட்டில் எழுதி கலசம் நிறுத்தி கலசத்திற்கு முன்னால் தகட்டை வைத்து தகட்டின் மீது வாலை ரசமணி வைத்து அதற்கு முன்னால் படையலிட்டு தேங்காய் பூ பழம் வெற்றிலைப் பாக்கு வைத்து கிழ்கண்ட மந்திரத்தை 11 நாட்கள் காலை , மாலை என 108 வீதம் ஜெபித்து உருவேற்றி அணிந்தால் ஏவல் பில்லி , சூனியம் , தாண்டு, தூவல், செய்வினை என்னும் மாந்திரிக அஷ்ட கர்மங்கள் விலகும்.
''ஒம் சங்கராய நமா சண்முகா ய ந மா தேவி தேவி பஞ்சாட்சர ரூபி வாலை ரூபி பீஜாஷரி சகல ஏவல் பில்லி சூனியங்கள் மார் மார் நசி நசி சுவாஹா ''
ரசமணிக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அதைவிட பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்.வீட்டிலோ அல்லது வியாபரம் செய்யும் இடத்தில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் சகலவிதமான காரிய தடைகளும் நீங்கும்,ஏவல்,பில்லி,சூனியம் போன்ற எந்த விதமான மந்திர தந்திர வித்தைகளும் பலிக்காது.வியாபாரம் செழித்து வளம் பெரும்.போட்டி பொறாமை அகன்று நேர் வழியில் பயணிக்க வைப்பதில் ரச லிங்க வழிப்பாடு மிகவும் சக்தி வாய்த்த ஒன்றாகும்
ரசலிங்கம், ரசமணி விநாயகர் சிலை : ரூபாய் : 20,000 முதல்
தெய்வீக ரச மணி, ரசலிங்கம், ரசமணி விநாயகர் சிலை கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com