Sunday, September 23, 2018

தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்


தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்:
நன்கு முற்றிய கல்யாண பூசணிக்காயிலிருந்து 250 மி.லி சாறு எடுக்கவும்.
பாதாம் பருப்பு – 10 கிராம்
பிஸ்தா பருப்பு – 10 கிராம்
அக்ரோட் பருப்பு – 10 கிராம்
சாரப் பருப்பு – 10 கிராம்
கசகசா – 10 கிராம்
பாதாம் பிசின் – 10 கிராம்
வேலம் பிசின் – 10 கிராம்
ஆவாரம் பிசின் – 10 கிராம்
முருங்கைப் பிசின் – 10 கிராம்
மேற்கண்ட பருப்பு மற்றும் பிசின் வகைகளை பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும்.
கல்யாணப் பூசணிச் சாற்றில் 500 கிராம் கற்கண்டு, ½ லிட்டர் பசும்பால் சேர்த்துக் கரைத்து அடுப்பேற்றி, சிறுதீயாய் எரிக்கவும். பாகுபதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள பருப்பு, பிசின் வகைகளை முறைப்படி கலந்து கிண்டி கீழிறக்கவும். லேகியம் ஆறிய பின் 250 கிராம் நெய் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.
தினசரி காலை, இரவு உணவுக்குப்பின் பாலுடன் 5 கிராம் அளவு லேகியம் சாப்பிட உடல் உஷ்ணம் தணிந்து, தேகம் வலுத்து தாது பெருகும். அதி உஷ்ணம் எனப்படும் வெட்டை அதிகரித்த நிலையில், உயிர்துளியில் (விந்து) உள்ள அணுக்கள் அசையும் தன்மையை இழக்கவும், மடிந்து போகவும் விந்து நீர்த்து வீணாக்கிவிடவும் வாய்ப்பிருந்தால் மேற்கண்ட லேகியம் ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com