Monday, February 27, 2017

செய்வினையும் அதன் ஏழு வகைகளும்

செய்வினையும் அதன் ஏழு வகைகளும்

பொதுவாக செய்வினைகள் ஏழு வகைகளில் செய்யப்படுகின்றன. அவை 1, பந்தனம், 2. ஸ்தம்பனம், 3. மோகனம், 4. ஆகர்ஷனம், 5. உச்சாடனம், 6. உன்மத்தனம், 7. மாரணம் என்ற ஏழு முறைகளில் செய்யப்படுகின்றன இனி இந்த முறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. பந்தனம் :
                       பந்தனம் என்பது ஒருவர் செய்யும் செய்வினை செய்பவரை பாதிக்காமல் தன்னை சுற்றி கட்டு போட்டு கொள்வது.

2. ஸ்தம்பனம் :
                            ஒருவர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் எதுவாயினும் அதை நடைபெற விடாமல் தடுப்பதாகும். ஸ்தம்பனம் - இயக்கத்தை நடைபெற விடாமல் நிறுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.

3. மோகனம் :
                          ஒருவர் தன்னை பற்றியே நினைத்து உடலும் உள்ளமும் உருகும்படி செய்துவிடுதல். மோகனம் மூலமாக செய்வினையால் பாதிக்கப்பட்டவர் உறங்கும்போது கெட்ட கனவுகள் கண்டு உறக்கத்திலேயே விந்து கழியும், நாளடைவில் உடல் நலம் கெட்டு அவதிப்படுவார்.

4. ஆகர்ஷனம் :
                             ஒருவரை வசிகரித்து யாருக்காக வசீகரப்படுத்தப் படுகிறாரோ அவருக்காக எதையும் செய்ய தயாராக மாறுதல்.  இதை வசியம் என்றும் சொல்லுவார்கள்.

5. உச்சாடனம் :
                             ஒருவரை மற்றொருவர் மேல் பைத்தியம் பிடித்தது போல் ஆக்கி விடுவது, ஒருவரின் முன்னேற்றத்தை தடுப்பது, வீட்டில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல் சண்டையிடும்படி செய்தல், பண விரயங்களை உண்டாக செய்தல், இன்னும் பல கஷ்டங்களை உண்டாக்க முடியும்.

6. உன்மத்தனம் :
                               ஒருவரை பைத்தியமாக்கி விடுதல், கணவன் - மனைவி இடையே சந்தேகத்தை உண்டாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிரித்து விடுதல்.

7. மாரணம் :
                        ஒருவரை வியாதியால் உழல வைத்து நடமாட முடியாதபடி செய்து மரணமடைய செய்தல்,  கற்பத்தில் உள்ள கருவை அழித்தல், வீட்டில் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களை ஏற்படுத்துதல்.

          ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டால் அதனால் அவருக்கு 12 வருட காலம் பாதிப்புகள் ஏற்படும், ஆனால் செய்தவருக்கோ அதனால் 98 வருடங்கள் பாதிப்புகள் ஏற்படும். அவரும் அவருடைய சந்ததியினரும் செழித்து வாழ முடியாது குல நாசமடையும். ஆகையால் தீய காரியங்களை செய்யாமல் இருப்பதே நாமும் நம் வம்சமும் செழித்து நீடூடி வாழ வகை செய்யும்.

ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989