நவரத்தின கற்களின் தரம் கண்டறிவது எப்படி?
நவம் என்றால் ஒன்பது என்று பொருளாகும். ரத்னம் என்றால் ஒளி என்று பொருள்படும். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவரத்தினங்களாகும். இவைகளில் முத்து மற்றும் பவளம் தவிர மற்ற அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்களாகும். முத்தும் பவளமும் கடலிலிருந்து கிடைக்கிறது.
நல்ல தரமான நவரத்தினங்களை எப்படி கண்டறிவது என்று பார்ப்போம்.
முத்து கல்லை நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதத்தை கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல்லை குத்து விளக்கு ஒளியின் முன்பு காட்டினால் சிவப்பு நிறமாக தோன்றும்.
வைர கல்லை சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளத்தின் மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் கல்லை பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்பராக கல்லை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப்பூ வாசனை வரும்.
வைடூரிய கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.