குலதெய்வ அனுக்கிரகம் இருந்தால்தான் ஒருவருக்கு மற்ற தெய்வங்களின் ஆசிகள் மற்றும் பிரார்த்தனை பலன்கள் மிக எளிதாக கிடைக்கும். நாம் செய்யும் பரிகாரங்களுக்கும் விரைவான பலன்கள் கிடைக்கும்.
குலதெய் வழிபாடுகள் தற்காலத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் என்னதான் கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்தாலும் பிரார்த்தனைகளின் பலன்கள் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை.
இதனால் என்னதான் கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்தாலும் பிரார்த்தனைகளின் பலன்கள் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை.
இப்போதே குலதெய்வ வழிபாடுகள் குறைந்திருப்பதினால் வருங்கால சந்ததிகளுக்கு குலதெய்வம் என்றாலே என்ன என்று தெரியாத சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்கால சந்ததியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும்
குலதெய்வங்களைப்பற்றி தவறாமல் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
குலதெய்வங்களைப்பற்றி தவறாமல் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
குலதெய்வ வழிபாட்டை
ஒரு சிறிய பயிற்சியின் மூலம் எளிதாக இந்த தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லலாம்.
ஒரு சிறிய பயிற்சியின் மூலம் எளிதாக இந்த தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லலாம்.
வீட்டில் ஒரு புது உண்டியல் வாங்கி குலதெய்வ படம் அல்லது குலதெய்வம் என்று எழுதி அந்த உண்டியலின் மேல் ஒட்டி வைக்கவும். குலதெய்வத்தை நினைத்து தினமும் ஒரு ருபாய் காணிக்கையை நம் பிரார்த்தனையைக்கூறி உண்டியலில் சேமித்து வரவும். இதை உங்கள் மகன் மற்றும் பேரக் குழந்தைகளிடமும் தொடர்ந்து செய்து வரச் சொல்லவும். குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது இந்த காணிக்கையை உண்டியலில் செலுத்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இதுவே பழக்கமாகிவிடும்.தினமும் குலதெய்வத்தை நினைப்பதனால் குல தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் குலதெய்வங்களின் மகத்துவங்கள் தெரியவரும்.