Friday, December 29, 2017

குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு


குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு
குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது. எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம்.
குலதெய்வம் என்பது நமது குலத்தில் அதாவது பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வம் ஆகும். இத்தகைய தெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் வேறொரு தெய்வத்தையோ அல்லது தெய்வங்களையோ வழிபாடு செய்வார்கள். அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும். தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள். இது மிகவும் தவறு.
குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலம் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.
நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.
ஆனால் தற்காலத்தில் இத்தகைய கூட்டு வழிபாடு குறைந்து போய் விட்டது. மக்களும் அவரவர் சொந்த பந்தங்கள் மற்றும் பூர்வீக வசிப்பிடத்தினை விட்டு புலம் பெயர்ந்து போய்விட்டார்கள். பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள். விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள். அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.
எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று. உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள். ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.
குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும். அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும். காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம். இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.
குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது. இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.
மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, December 28, 2017

கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு


கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு:
சித்தம் ஆகாசத்தொடு இணையும் போது அதுவே சிதம்பரம். இங்கே கொடுக்கப்பட்ட 'சிதம்பர' சக்கரத்தில் பஞ்சாட்சரம் மந்திரம் உண்டு. வாலையை உணர்ந்தால் அதுவே சச்சிதானந்தம். (சத்+சித்து+ஆனந்தம்)
"ஐம்பதொரட்சரந்தான் ஆச்சு, 
நெஞ்ஜெழுத்தாலே நினையா மலந்த
நிசந்தெரியுமொ வாலைப் பெண்ணே. 
நோக்கிகோல் வாசியை மேலாக வாசி,
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே.
சிதம்பர சக்கரம் தானரிந்தார்
சீமையில் உள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரமென்றால் அதற்குள்
தெய்வத்தை யல்லவோ அறிய வேணும்"
இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக, வந்து கொண்டே இருக்கும். அதாவது வாசியோகத்தில் இருக்கும் எவருக்குமே சித்திக்கும் இந்த ஜோதியானது, சஹாஸ்ரத்தில் மேல்நோக்கியே இருக்கும். ‘உன் உடலை வெறும் உப்பிட்ட பாண்டம் என்று மட்டும் எண்ணாதே, அதை பேணவேண்டும்’ என்கிறார்கள் சித்தர்கள். காலங்கிநாதர், போகர், போன்ற சித்தர்கள் எல்லோருமே மேலே சொன்ன இந்த வரிகளை தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர்.
செப்பு தகட்டில் இந்த சக்கரத்தை செய்து வைத்துள்ளவர்கள், முறையாக அதை ஆராதிக்க வேண்டும். பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து அதை இந்த சக்கரம் மேலே கையால் தேய்த்து பூசி, மையத்தில் குங்குமம் இட்டு வெள்ளை மலர்கள் சாற்றி , தூபம் காட்டியபின். தங்கள் தியானத்தை செய்து வரவேண்டும். சில வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ அது உங்களை அறியாமல் உங்களுக்குள் ஆன்ம சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்.
உங்கள் ஆதார சக்கரத்தின் சக்தி நிலைக்கு ஏற்பத்தான் இந்த உயர்வு அமையும். நம் உடலில் உள்ள ஆறாதார சக்கரங்களான மூலம் முதல் ஆக்னேயம்வரை அனைத்து கதவுகாளையும் திறந்துகொண்டுபோனபின் கபாலம் என்ற சிரசில் இலயிக்க ஆனந்தம் தோன்றும். சிலருக்கு சிலது இயங்கும் சில சக்ரங்கள் பழுதுபட்டிற்றுக்கும். அதில் தடையில்லாமல் ஓட்டத்தை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள்.
இவ்வாரக தெய்வம் இருக்கையில், புத்தி கெட்ட மாண்பர்கள், தங்கள் ஆகாச சக்ரத்தின் கதவு திறந்து வாலை தெய்வத்தை காணமலே சாகின்றதேன் என்று கேள்வி கேட்கிறார் போகர்.
கேட்டது கிடைக்கும் சிதம்பர சக்கர வழிபாடு:
சிதம்பர சக்கரத்தை செம்பு அல்லது பஞ்சலோக தகட்டில் கீறி அதை ஆராதிக்க வேண்டும்.பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து அதை இந்த சக்கரம் மேல் பூசி மையத்தில் குங்குமம் இட்டு மல்லிகை பூ மாலை சாற்றி தூபம் காட்டி தியானிக்க வேண்டும்.
சில வாரங்களிலோ மாதங்களிலோ உங்களை அறியாமல் ஆன்மீக சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்
.அதேபோல் கேட்டது எல்லாம் கிடைக்கும்.
மந்திரம்:"ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா"
நாள் ஒன்றுக்கு 108 உருவீதம் செபிக்க சகலமும் சித்தியாகும்.
எல்லோரும் உங்களை பின் தொடர்ந்து வசியமாகி சொல் பேச்சு கேட்பார்கள்.நீங்கள் கூறுவதை தேவவாக்காக கேட்பார்கள்.சகல காரியங்களும் சித்தியாகும்,
பலிக்கும்,தொழில் வியாபாரம் விருத்தியாகும் லாபம் உண்டாகும்.
உருவேற்றிய சிதம்பர சக்கரம் தேவைப்படுவர்கள் அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


Monday, December 25, 2017

பைரவர் வழிபாடு:


பைரவர் வழிபாடு:
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
பைரவ தோற்றம்
பிரித்தானிய சுவடிக்கூத்தில் இருக்கும் பைரவர் சிலை.
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள்.
அட்சர பீடங்களின் காவலன்[தொகு]
சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சன் மகளாக பிறந்தார். அவர் தாட்சாயினி என்றும் சதி தேவி என்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார். ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார். அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து இறக்கிறார்.
சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.
பைரவ வடிவங்கள்
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

அஷ்ட(எட்டு) பைரவர்கள்
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
அசிதாங்க பைரவர்
முதன்மை கட்டுரை: அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.
ருரு பைரவர்
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.
சண்ட பைரவர்
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.
குரோதன பைரவர்
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.
உன்மத்த பைரவர்
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.
கபால பைரவர்
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.
பீக்ஷன பைரவர்
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.
காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாட்சி ஆலயம், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - அனுமன் காட்டில், கபால பைரவர் - லாட் பஜாரில், சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில், பீஷண பைரவர் - பூத பைரவத்தில், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்.
அறுபத்து நான்கு பைரவர்கள்
பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.
நீலகண்ட பைரவர்
விசாலாக்ஷ பைரவர்
மார்த்தாண்ட பைரவர்
முண்டனப்பிரபு பைரவர்
ஸ்வஸ்சந்த பைரவர்
அதிசந்துஷ்ட பைரவர்
கேர பைரவர்
ஸம்ஹார பைரவர்
விஸ்வரூப பைரவர்
நானாரூப பைரவர்
பரம பைரவர்
தண்டகர்ண பைரவர்
ஸ்தாபாத்ர பைரவர்
சீரீட பைரவர்
உன்மத்த பைரவர்
மேகநாத பைரவர்
மனோவேக பைரவர்
க்ஷத்ர பாலக பைரவர்
விருபாக்ஷ பைரவர்
கராள பைரவர்
நிர்பய பைரவர்
ஆகர்ஷண பைரவர்
ப்ரேக்ஷத பைரவர்
லோகபால பைரவர்
கதாதர பைரவர்
வஞ்ரஹஸ்த பைரவர்
மகாகால பைரவர்
பிரகண்ட பைரவர்
ப்ரளய பைரவர்
அந்தக பைரவர்
பூமிகர்ப்ப பைரவர்
பீஷ்ண பைரவர்
ஸம்ஹார பைரவர்
குலபால பைரவர்
ருண்டமாலா பைரவர்
ரத்தாங்க பைரவர்
பிங்களேஷ்ண பைரவர்
அப்ரரூப பைரவர்
தாரபாலன பைரவர்
ப்ரஜா பாலன பைரவர்
குல பைரவர்
மந்திர நாயக பைரவர்
ருத்ர பைரவர்
பிதாமஹ பைரவர்
விஷ்ணு பைரவர்
வடுகநாத பைரவர்
கபால பைரவர்
பூதவேதாள பைரவர்
த்ரிநேத்ர பைரவர்
திரிபுராந்தக பைரவர்
வரத பைரவர்
பர்வத வாகன பைரவர்
சசிவாகன பைரவர்
கபால பூஷண பைரவர்
ஸர்வவேத பைரவர்
ஈசான பைரவர்
ஸர்வபூத பைரவர்
ஸர்வபூத பைரவர்
கோரநாத பைரவர்
பயங்க பைரவர்
புத்திமுக்தி பயப்த பைரவர்
காலாக்னி பைரவர்
மகாரௌத்ர பைரவர்
தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சொர்ண ஆகர்ஷண பைரவர்
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
கால பைரவர்
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
வேறு பைரவ வடிவங்கள்
"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்குவர் என்று பொருள்.
பைரவ வழிபாடு
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பைரவ விரதம்
பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும்.பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
பைரவ காயத்ரி
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”
பைரவர் காயத்ரி
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

முருகனின் ஆறுபடை வீடுகள்


முருகனின் ஆறுபடை வீடுகள்
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்,
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்
திருவாவினன்குடி (எ) பழனி
திருவேரகம் (எ) சுவாமிமலை
திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
பழமுதிர்சோலை
முதற்படை வீடு திருப்பரங்குன்றம்:
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இரண்டாம்படை வீடு திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது
மூன்றாம்படை வீடு திருவாவினன்குடி, பழனி :
திருவாவினன்குடி முருகனின் மூன்றாம் படை வீடாகும். பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன
நான்காம்படை வீடு சுவாமிமலை :
சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இங்கு முருகன் சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று. இது கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஐந்தாம்படை வீடு திருத்தணி :
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது. சீபுரணகிரி, கணிகாசலம், மூவாத்திரி , அண்ணகாத்திரி, செருத்தணி போன்ற பெயர்களும் உண்டு.
ஆறாவதுபடை வீடு பழமுதிர்சோலை:
பழமுதிர்சோலை முருகனின் ஆறாவது படைவீடு ஆகும். இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவைபாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்ச்சோலை என்று பெயர் பெற்றது.
முருகனுக்கு எத்தனை பெயர்கள்?
1. அமரேசன், 2. அன்பழகன், 3. அழகப்பன், 4. பாலமுருகன், 5. பாலசுப்ரமணியம், 6. சந்திரகாந்தன், 7. சந்திரமுகன், 8. தனபாலன், 9. தீனரீசன் 10. தீஷிதன், 11. கிரிராஜன், 12. கிரிசலன், 13. குக அமுதன், 14. குணாதரன், 15. குருமூர்த்தி.
16. ஜெயபாலன், 17. ஜெயகுமார், 18. கந்தசாமி, 19. கார்த்திக், 20. கார்த்திகேயன், 21. கருணாகரன், 22. கருணாலயன், 23. கிருபாகரன், 24. குலிசாயுதன், 25. குமரன், 26. குமரேசன், 27. லோகநாதன், 28. மனோதீதன், 29. மயில்பிரீதன், 30. மயில்வீரா.
31. மயூரகந்தன், 32. மயூரவாஹனன், 33. முருகவேல், 34. நாதரூபன், 35. நிமலன், 36. படையப்பன், 37. பழனிவேல், 38. பூபாலன், 39. பிரபாகரன், 40. ராஜசுப்ரமணியம், 41. ரத்னதீபன், 42. சக்திபாலன், 43. சக்திதரன், 44. சங்கர்குமார், 45. சரவணபவன்.
46. சரவணன், 47. சத்குணசீலன், 48. சேனாபதி, 49. செந்தில்குமார், 50. செந்தில்வேல், 51. சண்முகலிங்கம், 52. சண்முகம், 53. சிவகுமார், 54. சிஷிவாகனன், 55. செளந்தரீகன், 56. சுப்ரமண்யன், 57. சுதாகரன், 58. சுகதீபன், 59. சுகிர்தன், 60. சுப்பய்யா.
61. சுசிகரன், 62. சுவாமிநாதன், 63. தண்டபானி, 64. தணிகைவேலன், 65. தண்ணீர்மலயன், 66. தயாகரன், 67. உத்தமசீலன், 68. உதயகுமாரன், 69. வைரவேல், 70. வேல்முருகன், 71. விசாகனன், 72. அழகன், 73. அமுதன், 74. ஆறுமுகவேலன், 75. பவன்.
76. பவன்கந்தன், 77. ஞானவேல், 78. குகன், 79. குகானந்தன், 80. குருபரன், 81. குருநாதன், 82. குருசாமி, 83. இந்திரமருகன், 84. ஸ்கந்தகுரு, 85. கந்தவேல், 86. கதிர்காமன், 87. கதிர்வேல், 88. குமரகுரு, 89. குஞ்சரிமணாளன், 90. மாலவன்மருகன்.
91. மருதமலை, 92. முத்தப்பன், 93. முத்துக்குமரன், 94. முத்துவேல், 95. பழனிநாதன், 96. பழனிச்சாமி, 97. பரமகுரு, 98. பரமபரன், 99. பேரழகன், 100. ராஜவேல், 101. சைலொளிபவன், 102. செல்வவேல், 103. செங்கதிர்செல்வன், 104.செவ்வேல், 105. சிவகார்த்திக், 106. சித்தன், 107. சூரவேல், 108. தமிழ்செல்வன், 109. தமிழ்வேல், 110. தங்கவேல், 111. தேவசேனாபதி, 112. திருஆறுமுகம், 113. திருமுகம், 114. திரிபுரபவன், 115. திருச்செந்தில், 116. உமைபாலன், 117. வேலய்யா, 118. வெற்றிவேல்.
முருகா என்றால்!
இப்பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதே! ஆனால் முருகப்பெருமான் மட்டுமே பரிணாம வளர்ச்சிக்கு உட்படாதவன். பரிணாம வளர்ச்சிக்கு உட்படாத முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி ஆசி பெற்ற அகத்தியர் முதல் வழிவழி வந்திட்ட நவகோடி சித்தரிஷி கணங்களும் முருகன் அருளால் பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளானார்கள் என்ற பேருண்மையை உணரலாம். அவர்களைப்போல நாமும் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகாது அதனின்று விடுபட்டு முற்றுப்பெற்ற ஞானிகளாகிட முருகன் திருவடியை பற்றினாலன்றி முடியாது என்பதையும் உணரலாம். ஆதலின் பரிணாம வளர்ச்சியினின்று விடுபட முருகன் அருள் பெறுதல் அவசியம் என்று உணர்த்தப்படும்.
அவர்களெல்லாம் முருகன் அருள் பெற வேண்டுமெனில் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவஉணவை மேற்கொண்டு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் காலை மாலை ஓம் முருகா என்றோ ஓம் சரவண பவ என்றோ முருகனின் திருநாமங்களை தவறாது பயபக்தியுடன் சொல்லி வருவதுமாய் இருந்திட இருந்திட நாமத்தின் பலன்கூடி உண்மை அறிவுமிகும்.
மேல்மேலும் ஜீவதயவினை தொடர்ந்து செய்து செய்து முருகனின் நாமங்களை சொல்லி சொல்லி நாத்தழும்பேறும் வரையும் மனமுருகி சொல்ல சொல்ல பரிணாம வளர்ச்சியின் பாதையினின்று விடுபடும் மார்க்கம் முருகனருளால் புலப்படும். புலப்படும் பாதையில் முருகன் திருவடித்துணையுடன் சென்றுமே ஞானிகள் சூழ பாதுகாப்பாய் சென்றுமே பரிணாம வளர்ச்சியிலிருந்து விடுபடலாம்.
முருகா ஞானபண்டிதா! ஞானத்தலைவா! செந்தில்நாதா! சிங்காரவேலா! தணிகைநாதா! தணிகாசலனே! அசுரர் கிளை முடித்த அமராபதி காவலனே! தேவசேனாபதியே! குன்றமர்ந்த வேலா! குமாரக் கடவுளே! குகனே! சுவாமிநாதா! செங்கோட்டு வேலவனே! பழனிநாதா! என்றே முருகனின் நாமங்களை விடாது செபிப்போம். அவன் புகழ் பாடுவோம் நாமம் சொல்லுவோம்.
முருகன் பெருமையை பரப்புவோம் முருகன் அருள் பெறுவோம் மீளஇயலா பரிணாமத்தினின்று மீண்டு வெற்றி பெறுவோம்.
சொல்லுங்கள் முருகனின் நாமத்தை!
செல்லுங்கள் முற்றுப்பெறும் நிலை நோக்கி!!
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989