Wednesday, June 14, 2017

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

காமதேனு ஒரு தேவ லோகப்பசு. சகல தேவர்களும் தேவதைகளும் காமதேனுவில் அடக்கம்.வட இந்தியாவில் இந்தப் பூஜை மிகப் பிரசித்தம்.

எனவே,காமதேனுவைப் பூஜிக்கிறவர்கள் தங்களது மனவிருப்பங்கள் நிறைவேறப்பெறுவார்கள் என்று மந்திரம் சாஸ்திரம் கூறுகிறது.

பகவத்கீதையில் கூட ஸ்ரீ கிருஷ்ண பகவான்
"நான் பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன் என்று கூறுகிறார்".

காமதேனுவின் கன்றின் பெயர் நந்தினி.காமதேனுவைப் போலவே அதன் கன்றும் புனிதமானதாகக்   கருதப்படுகிறது.எப்பொழுதும் காமதேனுவுடன் அதன் கன்று இருக்கும் படி உள்ள படம் அல்லது விக்கிரகம் வைத்தே பூஜிக்க வேண்டும்.

தேவர்கள் தலைவன் இந்திரன் கீழ்க்கண்ட மந்திரங்களைக் கொண்டு காமதேனுவைப் பூஜித்துப் பலன் பெற்றிருக்கிறார்.


காமதேனு காயத்ரி மந்த்ரம்

ஓம் சுப காமாயை வித்மஹே
காம தத்ராயை ச தீமஹி
தன்னோ தேனு ப்ரசோதயாத்

காமதேனு அம்பிகா மந்த்ரம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை
சுரப்யை ச நமோ நமஹ
கவம் பீஜ ஸ்வரூபாய
நமஸ்தே ஜெகதம்பிகே

காமதேனு மூல மந்த்ரம்

ஓம் க்லீம் காமதுகே
அமோகே வரதே விச்சே
ஸ்புர ஸ்புர ஸ்ரீம்
பரஸ்ரீம் ஸ்ரீ காமதேனுவே நமோ நமஹ