Thursday, April 19, 2018

இசக்கியம்மன் வழிபாடு




இசக்கியம்மன் வழிபாடு :
இசக்கி அம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வமாவார். இவர் பெரும்பாலான இந்து சமயக் கோயில்களில் கையில் குழந்தையுடன் காட்சிதருகிறார். குழந்தைப் பேறில்லாத பெண்கள் இவரை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பதும், மாதவிடாய்ப் பிரட்சனையுள்ளவர்கள் இவரை வழிபட்டால் அப்பிரட்சனை தீரும் என்பதும் நம்பிக்கையாகும். இந்து சமய பெண் தெய்வக் கோயில்களில் பிரதானமாக இவருடைய சன்னதி அமைந்துள்ளது. தென் தமிழகத்தில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம் இருந்தது, இருப்பினும் தற்போது தமிழகம் முழுவதும் இசக்கியம்மன் வழிபாடு காணப்படுகிறது.
சொல்லிலக்கணம்
இசக்கியம்மன் - இசக்கி + அம்மன். இசக்கி என்ற சொல்லானது இயக்கி என்ற சொல்லின் மருவிய வடிவமாகும். இயக்கி என்ற பொதுமைப் பெயரை உடைய பலருள் இவரும் ஒருவர். இவரைப்போல எண்ணற்ற இயக்கிகள் உள்ளதாக நம்பப்படுகிறது. இவ்வாறான இயக்கிகளில் சிலர் மட்டுமே வழிபடப்படுகிறார்கள். பொதுவாக குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்க கூடிய வடிவம் மற்றும் கைகளில் குழந்தை இல்லாத வடிவம் என இரு வடிவங்களில் வழிபடப்படுகிறார். அவர்களில் இயக்கியம்மன் மட்டுமே வழிபடப்படுகிறார். இயக்குபவள் என்ற அர்த்ததில் எண்ணற்ற பெண் எட்சிகளை அழைக்கின்றனர். சமண சமயத்தில் தீர்த்தங்கரர்கள் பலரின் காவல் தெய்வங்களாக இந்த இயக்கிகளில் சிலர் இருந்துள்ளார்கள்.
வடிவம்
இயக்கியம்மன் சிவப்பு சீலை அணிந்தும், இடது கையில் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்தவாறும், வலது கையை ஓங்கியபடி சூலத்தையோ, கத்தியை ஏந்தியவாறும் உள்ளார். சில இடங்களில் சிவப்பு சீலையின்றி வெறும் கச்சையுடன் இருக்கும் சிலைகளும், கையில் குழந்தையின்றி இருக்கும் சிலைகளும் உள்ளன.
இசக்கியம்மன் வழிபாடு
இசக்கியம்மனை அவர் இருக்கும் இருப்பிடத்தின் பெயரோடு அழைக்கின்றனர். சமண சமயத்தவர்களின் இசக்கிகள் வழிபாட்டிலிருந்து இந்த இசக்கயம்மன் வழிபாடு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இசக்கியம்மன் பள்ளர்,கோனார், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களில் குலத் தெய்வமாக உள்ளார்.
இசக்கி அம்மன் வரலாறு:
இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றிவணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.
முதலில் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக் காட்ட கிராமமக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்துவார்களாம். பின்னர் அந்த கிராமமக்கள் யாராவது ஒருவரின் கனவில் அவர்கள் தோன்றி தான் இன்ன இடத்தில்புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்தபடியே அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம்.
அப்படிப்பட்ட கதையின்படியே மாரியம்மனும் தன்னை வெளிக்காட்ட அம்மை நோயை உண்டாக்கி அதை குணப்படுத்த தன்னை வழிபட வைத்ததாககிராமியக் கதைகள் உண்டு. அதைப் பற்றிய கதைகளை தனியாக மாரியம்மன்ஆலயங்கள் என்பதில் விவரித்து உள்ளேன். அப்படிப்பட்ட மாரியம்மன் அம்சத்தைசேர்ந்தவள் இசக்கி அம்மன்என்றாலும்ஒருவரதுகுடும்பத்தையும் குழந்தைகளையும் காத்தருளும் தெய்வமாக அவதரித்தவளே இசக்கி அம்மன் என்பார்கள். இப்படியாகஉருவான கிராம தேவதைகள், தெய்வங்களில் ஒருவளான இசக்கி அம்மன் என்றஅம்மன் பெரும்பாலும் கன்யாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, சேலம் மற்றும் நாகர்கோவில் போன்ற தென் பகுதிகளில் அதிகம் ஆராதிக்கப்படுபவள்.அவளுக்கு தனி ஆலயங்களும் உள்ளன.
இசக்கி அம்மனை மாரியம்மனின் ஒரு அம்சமாகவே கருதுகிறார்கள்.மேலும் அந்த இரண்டு அம்மன்களும் பார்வதியின் ஒரு ரூபமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இசக்கியம்மன் பொதுவாக சிவப்பு உடை உடுத்தி,கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடியே காட்சி தருகிறாள். அவள் கருணைஉள்ளம் கொண்டவள். அவள் ஆலயத்தை சுற்றி உள்ள பால்கள்ளு என்ற பெயரில்உள்ள சில செடிகளைக் கிள்ளினால் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம்வடியும். அதுவே அந்த இடங்களில் இசக்கி அம்மன் உள்ளாள் என்பதின் அடையாளம்என்று கூறுவார்கள். காரணம் குழந்தைகளுக்கு பால் ஊட்டி வளர்க்கும் ஒருதாயைப் போன்றவள் இசக்கி அம்மன் என்பதை அந்த சிறு செடி காட்டுகிறதாம்.
இசக்கி அம்மனை ரத்தத்தைக் குடிக்கும் நீலி என்ற யட்ஷினியின் சகோதரிஎன்றும் கூறுகிறார்கள். அந்த நீலி என்பவள் காளியின் யுத்த தேவதைகளில்ஒருவள். காளியும் பார்வதியின் அவதாரமே என்பதினால் இசக்கியம்மனும்பார்வதியை சேர்ந்த ஒரு தேவதையே எனக் கருதுவதில் தவறில்லை.
இசக்கி அம்மன் மானிட உருவு எடுத்து பூமிக்கு வந்தபோதுஅவளை வஞ்சித்து கொன்று விட்ட ஒரு செட்டியாரை பழி வாங்கும் விதத்தில் ஏழுஜென்மத்திலும் பிறப்பு எடுத்து தானே அவனை அழிக்க வேண்டும் எனசிவபெருமானிடம் வரம் கேட்டாள். அவள் கேட்ட வரத்தை தந்தாலும் ஒருநிபந்தனைப் போட்டார் சிவபெருமான். ஒவ்வொரு ஜென்மத்திலும் அவள் தன்னைசந்தித்து தனது ஆசிகளைப் பெற்றுக் கொண்டப் பின்னர்தான் அவனை அழிக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை அவள் ஏற்றுக் கொண்டாள். அடுத்த ஆறுஜென்மங்களிலும் அவளும் செட்டியாரும் பிறப்பு எடுத்தார்கள். அந்த ஆறுஜென்மத்திலும் அவளே அவரை பல வழிகளில் கொன்று பழி தீர்த்தாள்.
இனி மிஞ்சி இருந்தது கடைசி ஏழாவது ஜென்மம். மீண்டும்இருவரும் பிறப்பு எடுத்தார்கள். இசக்கி அம்மன் சிவபெருமானை தேடியவண்ணம்காட்டில் அலைந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒருநாள் அவள் காட்டு வழியேசென்று கொண்டு இருந்தபோது அவள் ஒரு சித்தரைக் கண்டாள். அந்த சித்தருக்குஅவள் மனிதப் பிறப்பு எடுத்து வந்துள்ளதின் காரணம் தெரியும் என்பதினால் அவளைசந்தித்தவர் அவளுக்கு சிவபெருமானும் பார்வதியும் இருந்த இடத்தைக் காட்டினார்.அதன்படி இசக்கியம்மன் சிவசக்தியை அவர்கள் உட்கார்ந்து இடத்துக்குச் சென்றுபார்த்து தனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அப்போது பார்வதிஅவளுக்கு துணையாக இருக்க நாகராஜரையும் அனுப்பி வைத்தாள்.
நாகராஜரும் இசக்கியம்மனும் காடு வழியே சென்று கொண்டுஇருந்தபோது அந்த வழியே ஒருவன் சென்று கொண்டு இருந்ததைக் கண்டார்கள்.அவனைப் பார்த்த நாகராஜர் இசக்கியம்மனிடம் அவன்தான் அந்த செட்டியார் எனஅடையாளம் காட்டினார். ஆகவே இசக்கியம்மன் அந்த வழிப்போக்கரிடம் சென்றுதான் ஒரு வேலை தேடுவதாகவும் அவர் வீட்டு வேலை செய்ய தன்னை வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டாள். அந்த வழிப்போக்கனும் தனது மனைவிநிறைமாத கர்பிணியாக இருப்பதினால் அவளுக்கு உதவி செய்ய ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவாறு அவளை தன வீட்டில்வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் வீட்டில் வேலை செய்யத் துவங்கினாள்இசக்கியம்மன். ஒரு நாள் அவன் வெளியில் சென்றபோது அவனை நாகராஜரைஅனுப்பி கொன்று விட்டாள்.
அந்த செட்டியாரின் மனைவிக்கு வந்துள்ள இசக்கியம்மன் ஒருபெண்ணாக இருக்காது, எதோ தெய்வமாகவே இருக்க வேண்டும் எனத் தோன்றியது.தன் கணவன் இறந்தப் பின் தானும் உயிர் வாழக் கூடாது என எண்ணியவள்இசக்கியம்மனிடம் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கின்றது என்றும் அதைவெளியில் எடுத்துவிட்டு தன் குடலையும் வெளியில் எடுத்து விட்டு தனக்கு மரணம்கிடைக்க அருளுமாறு கேட்டுக் கொண்டப் பின் மயங்கி விழுந்து விட்டாள். அவள்வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் இசக்கியம்மன் அவள் வயிற்றில்இருந்தக் குழந்தையை வெளியில் எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டு அவள்குடலை மாலையாக்கி தன் கழுத்தில் அணிந்து கொண்டாள்.
ஸ்ரீ காளி தேவி
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,